ஹிந்தியை நாட்டின் எந்தவொரு பகுதியிலும், எப்போதும் திணிக்க நினைத்த தில்லை. எனினும், அந்தந்த பிராந்திய மொழிகளுக்குப்பிறகு 2-ஆவது மொழியாக ஹிந்தியை பயன்படுத்த வேண்டும் என்றுதான் பேசிவருகிறேன்.

மாநில மொழிகளை வலுப்படுத்த வேண்டும் என்றே நான் எப்போதும் கூறிவருகிறேன். ஹிந்தி மொழியை பிரதானமாகக் கொண்டிராத மாநிலத்திலிருந்துதான் நானும் வந்துள்ளேன். நான் சார்ந்த குஜராத் மாநிலத்தில் குஜராத்திதான் தாய்மொழியே தவிர, ஹிந்தி அல்ல.

ஒருகுழந்தை தனது தாய்மொழியில் கற்கும்போது தான் அதன் மூளை வளர்ச்சியும், செயல்பாடும் தடுமாற்றமில்லாமல் இயல்பாக இருக்கும். அவ்வாறு தாய்மொழி என்று குறிப்பிடுவது ஹிந்தி மொழியை அல்ல. குஜராத் மாநிலத்துக்கு குஜராத்திமொழி இருப்பது போல், அந்தந்த மாநிலத்தின் பிரத்யேக மொழியே தாய்மொழியாக குறிப்பிடப்படுகிறது.

அதேவேளையில், நாட்டுக்கென பொதுவாக ஒருமொழி இருக்க வேண்டும். ஒருவர் தனது தாய்மொழிக்கு அடுத்தபடியாக, மற்றொரு மொழியைக்கற்க விரும்பினால் அது ஹிந்தியாக இருக்க வேண்டும். இதையே ஒருகோரிக்கையாக முன்வைத்தேன். அதில் என்ன தவறு இருக்கிறது என்பதைத் தான் புரிந்துகொள்ள இயலவில்லை’

நன்றி அமித் ஷா

Comments are closed.