பிஹார் மக்களின் நலனைக்கருதியே மெகா கூட்டணியில் இருந்து விலகி தேசியஜனநாயக கூட்டணியுடன் இணைந்து ஆட்சியை செலுத்த முடிவு செய்தேன். இருப்பினும், எனது முடிவு குறித்து காலம்கனியும்போது விரிவாக விளக்குவேன் என அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

பதவியேற்பு விழாவுக்குப் பின் பேசிய நிதிஷ் குமார், "பிஹார் மக்களின் நலனைக்கருதியே இந்த முடிவை எடுத்தேன். பிஹார் மக்களுக்கு சேவைசெய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். சமூக நீதிசார்ந்த வளர்ச்சி என்பது எப்போதுமே எனது அரசாங்கத்தின் தாரகமந்திரமாக இருக்கும்.

இருப்பினும், எனதுமுடிவு குறித்து காலம் கனியும்போது விரிவாக விளக்குவேன்" என்றார்.

முன்னதாக, இன்று காலை பிஹார் முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்றுக் கொண்டார். பாஜகவின் சுஷில் குமார் மோடி துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.

Leave a Reply