ஹைதராபாத் என்கவுன்ட்டர் சம்பவம் தொடர்பாக மாநகர போலீஸாருக்கு பாஜக எம்பி. லாக்கெட் சாட்டர்ஜி பாராட்டுதெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்ற நடவடிக்கையை சட்டப் பூர்வமாக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

ஹைதராபாத்தில் கால்நடை பெண்டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் கைதுசெய்யபட்ட நால்வரும் நேற்று போலீஸ் என்கவுன்ட்டரில் கொல்ல பட்டனர்.

இது குறித்து மேற்கு வங்கத்தின் ஹூக்ளி தொகுதி பாஜக எம்.பி. லாக்கெட் சாட்டர்ஜி கூறியதாவது:

நமதுநாட்டுக்காக எடுக்கப்பட்ட மிகச்சிறந்த நடவடிக்கை இது. காலையில் இந்த செய்தியை படித்ததும் நான் மகிழ்ச்சி அடைந்தேன். பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆன்மா இப்போது சாந்தி அடைந்திருக்கும். அவரது குடும்பத்திரும் மனஅமைதி அடைந்திருப்பார்கள். இது போன்ற என்கவுன்ட்டர்கள் சட்டப்பூர்வமாக்கப்பட வேண்டும்.

ஹைதராபாத் சம்பவம் போன்று நடந்தால் குற்றவாளிகள் தூக்கிலிடப் பட வேண்டும். அல்லது 7 முதல் 15 நாட்களுக் குள் என்கவுன்ட்டர் செய்யப்பட வேண்டும். ஹைதராபாத் போலீஸார் நிகழ்த்திய என்கவுன்ட்டருக்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.

இவ்வாறு லாக்கெட் சாட்டர்ஜி கூறினார்.k

Comments are closed.