'என்ஜிஓ., எனப்படும் அரசுசாரா அமைப்புகள் மற்றும் அதன் நிர்வாகிகள், தங்களுடைய சொத்துவிபரங்கள் குறித்த தகவலை, வரும், 31ம் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து, 10 லட்சம் ரூபாய் நன்கொடைபெறும் அல்லது ஒருகோடி ரூபாய்க்கு அதிகமாக மத்திய அரசின் நிதி உதவிபெறும் அமைப்புகளும், அதன் நிர்வாகிகளும், சொத்துக்கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக, லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டங்களின் கீழ், என்ஜிஓ.,க்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மத்திய அரசு ஊழியர்களும், வரும், 31ம் தேதிக்குள் தங்களுடைய சொத்துவிபரங்களை தாக்கல் செய்ய வேண்டும்.

இதுவரை, ஆண்டு வரவு – செலவு கணக்கை தாக்கல்செய்யாத, 14,222 என்.ஜி.ஓ.,க்கள் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதற்கு, மத்திய அரசு தடைவிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் கணக்கின்படி, தற்போது, நாட்டில் மூன்றுலட்சம் என்.ஜி.ஓ.,க்கள் செயல்பட்டு வருகின்றன.

Leave a Reply