உ.பி முதல்வர் யோகி ஆதித்யானத் மாநிலத்தின் பகுதிகளைப் பார்வையிடச் செல்லும்போது அதிகாரிகள் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கக்கூடாது என ஆணை பிறப்பித்துள்ளார். உத்தரப்பிரதேச முதல்வராக யோகி ஆதித்யானந்த் பொறுப்பேற்றதில் இருந்து மக்களின் நலன்கருதி அரசு பேருந்து ஓட்டுநர் பஸ்ஸை இயக்கும் போது மொபைல் போனில் பேசுவதை தடுத்தல் எனப் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

யோகி ஆதித்யானந்தின் ஒவ்வொர் உத்தரவுகளும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது. இந்நிலையில் மாநிலத்தின் பகுதிகளைப் பார்வையிட வரும் போது தனக்கு ஏசி வசதி, சிவப்புக்கம்பளம் போன்ற எந்த ஆடம்பர வசதிகளையும் செய்யக் கூடாது எனத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் டியோரியாவில் உள்ள கோர்க்காபூர் பகுதிக்குச் சென்றிருந்தபோது அதிகாரிகள் முதல்வருக்குச் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதனைத்தவிர்த்த முதல்வர் தன்னை கவனிப்பதில் கவனம்செலுத்தாமல், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறியதோடு, இனிமேல்தான் செல்லும் பகுதிகளுக்குச் சிவப்புக்கம்பள வரவேற்பு அளிக்கக்கூடாது எனத் தடா போட்டுள்ளார். 
 

Leave a Reply