எதை சொல்றீங்க?

இந்த ரூவா நோட்டு விவகாரத்தை தான் சொல்றேங்க. கறுப்பு பணம் ஒழிக்கறதா சொல்லிட்டு மக்களை ஒரு வருஷமா படுத்தி எடுத்துட்டாரு. ரொம்ப தப்புங்க. 

எதை வெச்சு அப்படி சொல்றீங்க? உங்களுக்கு ஏதும் பாதிப்புங்களா? 

எனக்குப் பெரிசா ஒண்ணுமில்லை. ஆனா நிறைய பேருக்கு பாதிப்பு இருக்குன்னு சொல்றாங்க. 

யாருக்கு எல்லாம் பாதிப்பு? ஒரு நாலைஞ்சு பேர் சொல்லுங்க. 

அது….அப்படி யாருன்னு சொல்ல முடியாது…..ஆனா ஊர் ஃபுல்லா பாதிப்பு இருக்குன்னு தான் பேசிக்கறாங்க. 

யார் பேசிக்கறா? 

அது வந்து….. அட என்னங்க நீங்க? எல்லாத்துக்கும் கேள்வி கேட்டுகிட்டு? இப்ப பாருங்க நாட்டில இருக்கற எல்லா கட்சியும் துக்க தினம்னு சொல்லி போராட்டம் பண்றாங்க, பாருங்க. அவங்க என்ன விவரம் இல்லாமயா பண்றாங்க? 

யார் எல்லாம் போராட்டம் பண்றாங்க? 

எல்லாரும் தான். இங்கே திமுக போராட்டம் பண்றாங்களே? 

திமுக கறுப்பு பண எதிரிங்களா? 

அப்படி…. சொல்ல முடியாது. அவங்க கிட்டயும் கறுப்பு பணம் இருக்கும்ங்க. 

காங்கிரஸ்? 

ஐயோ… அவங்க தானே மெயின் ஆளுங்களே? அவங்க கிட்ட இல்லாததா? 

அப்ப அவங்க மக்களுக்காக போராடுறாங்களா? இல்லை தங்க கிட்ட இருக்கறதை காப்பாத்திக்க போராடுறாங்களா? 

அது… அப்படி…. சரி விடுங்க… இப்ப பாருங்க… மாட்டுவீங்க. கம்யூனிஸ்ட் கூட போராடுறாங்களே? அவங்க கிட்ட ஏதுங்க கறுப்பு பணம்? 

கம்யூனிஸ்ட் எதுக்கு தான் போராடல? கம்ப்யூட்டர் வரக் கூடாதுன்னு கூட போராட்டம் பண்ணுன கூட்டம் தானுங்களே அது? 

அது… சரிதான். இப்ப பாத்தீங்கன்னா….. வந்து….

இருங்க… நானே லிஸ்ட் தரேன். சினிமாக்காரங்க நிறைய பேர் எதிர்க்கறாங்க. சரிங்களா? 

ஆமாம் ஆமாம். 

அவங்க கிட்ட கறுப்பு பணமே இல்லையா? 

அப்படி சொல்ல முடியாது. 

மதமாற்றம் க்ரூப், NGO எல்லாம் எதிர்க்கறாங்க. ஏன்? 

ஏன்? 

வெளிநாட்டுப் பணம் கறுப்புல வர இப்ப வழி இருக்கா? 

ம்ம்ம்…..? 

இல்லேல்ல? அந்த கோபம் இல்லாமயா இருக்கும்? 

நீங்க சொல்றீங்க….. இருந்தாலும்…. எனக்கென்னவோ சமாதானம் ஆக மாட்டேங்குது. ஊரே எதுக்குது. எல்லாருக்கும் பாதிப்பு இருக்குங்க. 

உங்களுக்கு பாதிப்பு இருக்கா? 

இல்லை. 

வேற யாருக்கு பாதிப்பு? 

ஐய்யய்யோ….மறுபடியும் முதல்ல இருந்தா…. ஆள விடுங்க…. நான் போறேன்.

Leave a Reply