என்.ஐ.ஏ., நடவடிக்கை காரணமாக காஷ்மீரில் கல்வீச்சு சம்பவங்கள் குறைந் துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

 

உ.பி., மாநிலம் லக்னோவில் என்.ஐ.ஏ., அலுவலக கட்டடத்தை திறந்துவைத்து அவர் பேசுகையில், கடந்த 3 வருடங்களில் நக்சலைட், பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாத சம்பவங்கள் குறைந்துள்ளன. காஷ்மீரில் என்.ஐ.ஏ., செயல்பாடுகாரணமாக கல்வீச்சு சம்பவங்கள் குறைந்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும்நடவடிக்கை எடுக்க உறுதியேற்றுள்ளோம். இதனை சவாலாக எதிர்கொண்டு, நக்சலைட், பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாத பிரச்னைகள் குறைக்கப் பட்டுள்ளது.

 

இதில் மத்திய அரசு வெற்றிபெற்றுள்ளது. கடந்த 3 வருடங்களில் வட கிழக்கு மாநிலங்களில் பிரிவினைவாத பிரச்னை 75 சதவீதமும், நக்சலைட் பிரச்னை 35- 40 சதவீதமும் குறைந்துள்ளது.கள்ளநோட்டுகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளிப்பதை கட்டுப்படுத்தும் போது பயங்கரவாதிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும். இந்த விவகாரத்தில் என்.ஐ.ஏ., சிறப்பாகசெயல்பட்டு வருகிறது. இதனால், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவிசெய்யும் நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply