எம்.பி.க்களிடம் பேசி, அவர்கள்தெரிவிக்கும் கருத்துக்கள் மற்றும் குறைகளை கேட்க, மத்தியமந்திரிகள் 5 பேரை பிரதமர் மோடி நியமனம் செய்துள்ளார். பிரதமர் நரேந்திரமோடி தினமும் மத்திய மந்திரிகள், எம்.பி.க்களை சந்தித்து பேசுவதை வழக்கத்தில் வைத்துள்ளார். சமீபகாலமாக நிறைய பேர் அவரை சந்தித்து பேசி தங்கள் தொகுதியில் உள்ள குறைகளை விளக்கமாக சொல்லவேண்டும் என்று அனுமதி கடிதம் கொடுத்து விட்டு காத்திருக்கிறார்கள்.

இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண்பது பற்றி பிரதமர் மோடி ஆலோசனை நடத்திவந்தார். எல்லா எம்.பி.க்களையும் உடனுக்குடன் சந்தித்து அவர்களது கருத்துக்களை கேட்பதுபற்றி தனிக்குழு ஏற்படுத்தலாம் என்று மோடி முடிவு செய்தார்.

அந்த திட்டத்தின்படி மத்திய மந்திரிகள் 5 பேரை எம்.பி.க்களிடம் பேசி, அவர்கள்தெரிவிக்கும் கருத்துக்கள் மற்றும் குறைகளை கேட்க பிரதமர் மோடி நியமனம் செய்துள்ளார். அந்த 5 பேர் குழுவில் பா.ஜ.க. மூத்த மந்திரிகள் ராஜ்நாத் சிங், அருண்ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், நிதின்கட் காரி, மனோகர்பாரிக்கர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் பா.ஜ.க. எம்.பி.க்களுடன் பேசி வளர்ச்சித்திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்துவார்கள். எம்.பி.க்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்குவார்கள். இதன்மூலம் பா.ஜ.க. எம்.பி.க்களின் குறைகளை உடனுக்குடன் தீர்த்துவைத்து அவர்களது தொகுதி மேம்பாட்டுத் திட்டங்களுக்கு உதவமுடியும் என்று பிரதமர் மோடி நம்புகிறார். மிகவும் முக்கியமான பிரச்சினைகள் எழுந்தால்மட்டும் உரியநேரத்தில் தலையிட்டு பிரச்சினைகளை தீர்த்துவைக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.

Leave a Reply