அமெரிக்காவின் ஹவுஸ்டன் நகரத்தில் இன்று நடக்க விருக்கும் ஹவுடி மோடி நிகழ்வில் கலந்துகொள்ள விருக்கும், பிரதமர் நரேந்திர மோடி, முக்கிய எண்ணெய் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார்.

தற்போது மொத்த எண்ணெய் உபயோகத்தில் 80%, இந்தியா இறக்குமதிசெய்து வரும் நிலையில், சவுதி அரேபியா இரண்டாவது பெரிய இறக்குமதியாளராக இருந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்தவாரத்தில் மட்டும் சுமார் 20% விலையேற்றம் கண்டது கச்சா எண்ணெய் விலை. இதனால் பெரிய அளவில் இறக்குமதியை மட்டுமே நம்பியிருந்த இந்தியாவுக்கு, இது பெருத்த நெருக்கடியாகவே கருதப்பட்டது.

அதிலும் இந்தியா எப்போது ஈரானை தவிர்த்து மற்ற நாடுகளிடம் எண்ணெய் வாங்க ஆரம்பித்ததோ, அதிலிருந்தே பிரச்சனையாகவே இருந்து வருகிறது

இதனாலேயே மேலும் உலகின் பல நாடுகளுடன் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடலாம் நோக்குடன். ஹவுஸ்டனில் உள்ள முக்கிய எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்,

இதில் எரிபொருள் நிறுவனங்கள் மற்றும் எரிசக்தி நிறுவனங்ககள்  இந்தியாவில் செய்யப்பட உள்ள முதலீடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது , இந்த கூட்டத்தில் மின்னணு வாகன நிறுவனங்கள், கச்சா எண்ணெய், டீசல் உற்பத்தி நிறுவனங்கள், மாற்று எரிசக்தி நிறுவனங்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் , இதில் உலகின் முன்னணி நிறுவனங்களாக எமெர்சன், டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களும்  கலந்து கொண்டன

Comments are closed.