எலெக்ட்ரிக் வாகன பயன் பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு சலுகை அளிக்கஉள்ளது. எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி மற்றும் விற்பனைக்கும் இந்தசலுகை அளிக்கப்படும்.

இந்த தகவலை நிதி ஆயோக்தலைமை செயல் அதிகாரி அமிதாப்காந்த் நேற்று தெரிவித்தார். குறிப்பாக குறைவான சாலைவரி போன்ற சலுகைகள் அளிப்பதன் மூலம் இந்தியாவில் உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சியிலும், வேலைவாய்ப்பு உருவாக்கத்திலும் ஆட்டோ மொபைல் துறை தொடர்ச்சியாக மிக அதிகபங்களிப்பை அளிக்கும் என்றார்.

தொழில்துறை அமைப்பான அசோசேம் ஏற்பாடுசெய்திருந்த நிகழ்ச்சியில் பேசுகையில் இதனை கூறினார். அவர் மேலும் பேசியதாவது, ஆட்டோ மொபைல் துறை, பேட்டரி உற்பத்தி மற்றும் சார்ஜிங் மைய உருவாக்கம் போன்றவற்றில் இந்தியா சிறந்துவிளங்க வேண்டும். இதன் மூலம் நகரங்களின் காற்றுமாசு அளவை குறைக்கலாம்.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு குறைவான சாலைவரி விதிப்பதன் மூலம் மூலம் அதன் முயற்சிகளுக்கு அரசு உறுதுணையாக இருக்கும். பொருளாதார வளர்ச்சியில் முக்கியபங்களிப்பை செய்யும் துறையாக ஆட்டோ மொபைல் உள்ளது. இந்திய ஜிடிபி-யில் ஆட்டோ மொபைல் துறையின் பங்கு 7.2 சதவீதமாக இருக்கிறது என்றும் சுட்டிக்காட்டினார்.

பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் பார்க்கும் போது, இந்தியாவில் 2027-28-ம் ஆண்டுகளில் எலெக்ட்ரிக் பேட்டரிகளின் விலை ஒருகிலோவாட் 273 டாலரிலிருந்து 73 டாலராக குறைந்திருக்கும். இது இந்தியாவின் தேவை தாண்டிய விலையாகும். இந்தியதேவையை கருத்தில் கொண்டால் ஒருகிலோ வாட் விலை 60 டாலராக மேலும் குறைவாக இருக்கும். – பிடிஐ

Leave a Reply