பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு நேற்று (புதன்கிழமை) 90-வது பிறந்த தினமாகும்.

ஒவ்வொரு ஆண்டும் அவர்தன் பிறந்த தினத்தை உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். கடந்த ஆண்டு அவரது மனைவி கமலா மரணம் அடைந்ததால் அத்வானி தனதுபிறந்த நாளை கொண்டாடவில்லை.

இந்த ஆண்டு அவரது பிறந்த நாளை மிகவும் சிறப்பாகக் கொண்டாட அவரது ஆதரவாளர்கள் ஏற்பாடுகள் செய்திருந்தனர். அவர்கள் மத்தியில் எல்கே.அத்வானி பிறந்த நாளைக் கொண்டாடினார்.

பா.ஜ.க. மூத்த தலைவர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள் அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர். பிறகு அவர் பிரிதிவிராஜ் சாலையில் உள்ள தன்வீட்டுக்கு பார்வையற்ற குழந்தைகளை வரவழைத்து இருந்தார்.

90 பார்வையற்ற சிறுவர்- சிறுமியருடன் அமர்ந்து அவர் காலைஉணவு சாப்பிட்டார். இதன் மூலம் அத்வானி தொடர்ந்து உற்சாகமாக இருப்பதை உறுதி படுத்தியுள்ளார்.

அத்வானிக்கு, பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

‘இந்த இனிய நாளில் நீங்கள் நல்ல உடல்நலம் பெற்று நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடன் வாழ பிரார்த்தி க்கிறேன். கடின உழைப்புமூலம் இந்த நாட்டுக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்ட தலைவர் அத்வானி.

இவ்வாறு அதில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

எல்.கே.அத்வானி தனது மனைவி இறந்ததால் சிலமாதங்கள் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். பா.ஜ.க. நிகழ்ச்சிகளிலும்கூட அவர் பங்கேற்கவில்லை.

ஆனால் கடந்த தீபாவளி தினத்தன்று வாரணாசி சென்று 90 தீபங்களை ஏற்றிவழிபட்டார். அன்று முதல் மீண்டும் அவர் உற்சாகமாக தீவிர அரசியலில் ஈடுபட்டுவருகிறார்.

Leave a Reply