தமிழகத்தில் எல்லா கட்சிகளும் உள்ளாட்சிதேர்தலில் தங்களது பலத்தை நிரூபிக்க தனித்து போட்டியிட வேண்டும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத் தியுள்ளார்.  

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரில் பாஜக சார்பில்  உள்ளாட்சிதேர்தல் உறுப்பினர் பதவிக்கு போட்டியிடவுள்ள  பெண்வேட்பாளர் சரஸ்வதியை ஆதரித்து பொன்.ராதாகிருஷ்ணன் பிரச்சாரம்செய்தார். 

அப்போது நரேந்திரமோடி அரசின் சாதனைகளை விளக்கிகூறி தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமாறு வீடுவீடாக சென்று பொன்.ராதாகிருஷ்ணன் துண்டுபிரசுரங்களை வழங்கி  தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், உள்ளாட்சி தேர்தலில் பாஜக சாதனைபடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். தமிழகத்தில் எல்லா கட்சிகளும் உள்ளாட்சிதேர்தலில் தங்களது பலத்தை நிரூபிக்க தனித்து போட்டியிட வேண்டும் எனவும் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

Leave a Reply