ரஷ்யாவிடமிருந்து எஸ் 400 ரக ஏவுகணைகள் வாங்குவது குறித்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது.

ரஷ்யா விடமிருந்து, எஸ் -400 ரக ஏவுகணைகள் உள்ளிட்ட, பல்வேறு ராணுவ ஆயுதங்கள், தளவாடங்கள் வாங்குவதற்கு, மத்தியஅரசு திட்டமிட்டது. இந்தியா, ரஷ்யா இடையேயான ஒப்பந்தங்கள் தொடர்பாக, இருதரப்பும், ஒவ்வொரு ஆண்டும் சந்தித்துபேசுகின்றன. அதன்படி, இந்த ஆண்டுக்கான இருதரப்பு பேச்சில் பங்கேற்க, ரஷ்ய அதிபர், விளாடிமிர்புடின், இரண்டு நாள் பயணமாக வந்துள்ளார்.

இன்று, டில்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் ரஷ்ய அதிபர்புடின், பிரதமர் மோடி இருவரும் சந்தித்துபேசினர். இந்தசந்திப்பை தொடர்ந்து ஐந்து எஸ் 400 ரக ஏவுகணைகள் வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், விண்வெளியில் ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத் தானது. ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள நோவோசிபிர்ஸ்க் நகரில் இந்திய கண்காணிப்பு மையம் அமைக்கவும் முடிவு செய்யப் பட்டது.

 

பின்னர் இரு நாட்டு தலைவர்களும் நிருபர்களை கூட்டாக சந்தித்தனர்

அப்போது, பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: இந்தியாவின் வளர்ச்சியில் ரஷ்யாவிற்கு பெரும் பங்குள்ளது. இருநாடுகளும் சிறப்பான உறவை கொண்டுள்ளன. இருநாடுகளுக்கு இடையில் 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த ஒப்பந்தங்கள் மூலம் இருநாட்டு உறவு வலுப்பெறும். பயங்கர வாதத்தை கட்டுப் படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்தியாவுடன் நட்புறவு கொண்டுள்ள நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்

 

ரஷ்ய அதிபர் புடின் கூறுகையில், ரஷ்யாவின் நீண்டகால நட்புநாடு இந்தியா. விண்வெளிக்கு ஆட்களை அனுப்ப இந்தியாவிற்கு ரஷ்யா உதவிசெய்யும். அமைதியை எட்டுவதற்காக நீண்ட கால கூட்டாளியாக இருநாடுகளும் உள்ளன. பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் ஆலோசனை செய்யப்பட்டது. உறவை இன்னும் வலுப் படுத்துவது குறித்து ஆலோசனை நடந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply