ஏகாதசி என்றால் தமிழில் பதினொன்று எனப் பொருள்படும் . ஏகாதசி அன்று விரதம் மேற்கொள்வதை அனைத்து சாஸ்திரங்களும் வலியுறுத்துகின்றன”. மற்ற விரதங்களை விட ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது மிக சிறப் பானதாகும் , வருடத்துக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். அனைத்து ஏகாதசி களிலும் விரதம் இருந்து வழிபடுவோர் பிறவிதுயர் நீங்கி வைகுண்ட பதவியை அடைவர் என்பது நம்பிக்கை. வருடம் முழுவதும் ஏகாதசி விரதத்தை கடை பிடிக்க இயலாதவர்கள், மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசியில் மட்டுமாவது விரதம் இருப்பது சிறப்பானபலனை தரும். மூன்றுகோடி ஏகாதசிகளில் விரதமிருந்த பலனை தரகூடியது என்பதால் வைகுண்ட ஏகாதசி ‘முக்கோடி ஏகாதசி’ எனவும் அழைக்கப்படுகிறது. தீட்டு காலத்தில்கூட ஏகாதசி விரதத்தை மேற்கொள்ளலாம்.

மகாபாரதத்தில் கவுரவர்களோடு பாண்டவர்கள அதர்மத்தை எதிர்த்து தர்மத்தைகாக்க யுத்தம் செய்து கொண்டிருந்தபோது வைகுண்ட ஏகாதசி நாளன்று அர்ஜுனனுக்குக் கீதையை பகவான் கிருஷ்ணன் போதனைசெய்தார். எனவே இந்தநாளை, “கீதா ஜெயந்தி’ என கொண்டாடுகின்றனர். ஏகாதசி விரதத்தின்போது எக்காரணத்தை கொண்டும் துளசி பறிக்கக் கூடாது. பூஜைக்கான துளசியை முதல் நாளே பறித்துவிட வேண்டும்.

Leave a Reply