"கடந்த 2 வருடங்களில் ராகுல் 6 வெளிநாடுகளுக்கு 72 நாட்கள் சென்று தங்கியுள்ளார். அப்போது SPG அதிகாரிகளை அவர் அழைத்து செல்லவில்லை. அவர் எங்கு சென்றார்? அவர் ஏன் SPG வீரர்களை அழைத்து செல்லவில்லை என்பது பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறோம்."

மக்களவையில் ராகுல் காந்தியைப் பார்த்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எழுப்பிய இந்தக் கேள்வி மிகவும் முக்கியமானது. விசாரணைக்குரியதும் கூட. இந்தியர்கள் அனைவரும் சிந்திக்க வேண்டிய விஷயம் இது.

பிரதமர் வேட்பாளராக பிரதான எதிர்க்கட்சியால் முன்னிருத்தப்படும் ஒரு நபர் தான் வெளிநாடுகளுக்கு செல்லும்போதெல்லாம்தான் செல்லும் இடங்களை பிறர் அறியாமல் இருக்கவும், தான் சந்திக்கும் நபர்கள் யாரென்பதை பிறர் அறிந்து கொள்ளாமல் இருக்கவும் அரசால் தனக்கு அளிக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு படையினர்களை ஒதுக்கி வைத்துவிட்டு பயணம் செய்கிறார் என்றால், அதன் காரணம் என்ன..?..

அப்படி மர்மமாக அவர் செல்லும் இடங்கள் எவை..? அப்படி மர்மமாக அவர் சந்திக்கும் நபர்கள் யார்..? வெளிநாட்டில் அவருக்கு தனி குடும்பம் ஏதேனும் இருக்கிறதா..?  ஏதேனும் பண விவகாரங்களுக்காக இப்படி அடிக்கடி இரகசியப் பயணம் மேற்கொள்கிறாரா..?

ராகுல் ஏன் வெளிப்படையான பயணங்களை மேற்கொள்ளக் கூடாது..? இத்தகைய மர்ம நடமாட்டங்களுக்குரிய இவர் காங்கிரசின் பிரதமர் வேட்பாளராக இருக்க தகுதியானவர்தானா..?

Leave a Reply