விமான நிறுவனமான ஏர்இந்தியா லாபகரமாக செயல்படுவதற்கான வழிகளை ஆய்வுசெய்து வருவதாக மத்திய உள்நாட்டு விமானப் போக்கு வரத்துத் துறை இணையமைச்சர் ஜெயந்த்சின்ஹா தெரிவித்தார். ஜாம்ஷெட்பூரில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை பேசியவர் மேலும் கூறியதாவது: ஏர் இந்தியா நிறுவனத்தை சர்வதேசளவில் மிகப்பெரிய விமான நிறுவனமாக மாற்றவேண்டும் என்பதுதான் மத்திய அரசின் இலக்கு.


ஏர் இந்தியா உள்பட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் வலுப்படுத்து வதற்கான அனைத்து வாய்ப்புகளையும் ஆராய்ந்து வருகிறோம். லாபம் அதிகம் கிடைக்கும் புதியநகரங்களுக்கு விமானங்களை இயக்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது. மேலும், ஏர் இந்தியாவுக்கு புதியவிமானங்களும் வாங்கப்படவுள்ளன.
மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக தொடர்ந்து 10 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கிவந்த ஏர் இந்தியா, கடந்த ஆண்டு செயல்பாட்டு அளவில் லாபம் ஈட்டியுள்ளது என்றார் அவர்.

Leave a Reply