புதியனவற்றை கண்டுபிடிக்க வேண்டியது, மிகவும் முக்கியமாகும். இதற்காக நாம் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஏற்கெனவே இருப்பதை காப்பியடித்து, பிஹெச்டி பட்டம் பெறக்கூடாது.


 காப்பியடித்து பிஹெச்டி பட்டம்பெறுவது குறித்து, இந்த பல்கலைக் கழகத்தில் இருப்போருக்கு தெரியாது என்று நினைக்கிறேன். அப்படியே அது குறித்து தெரிந்து வைத்திருந்தாலும், அதில் அவர்கள் ஈடுபடமாட்டார்கள் என்று நம்புகிறேன் (நகைச்சுவையாக இவ்வாறு தெரிவித்தார்).


 புற்றுநோயைவிட மிகவும் கொடியது ரத்தக் கோளாறு தொடர்பான நோய் . பழங்குடியின மக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்நோயை தடுப்பது தொடர்பாக நோபல்விருது பெற்றவர்களுடன் நான் கடந்த காலத்தில் ஆலோசனை நடத்தினேன்.

எனினும், அந்த நோய்க்கான மருந்தை நமது நாட்டு ஆராய்ச்சியாளர் களாலேயே கண்டுபிடிக்க முடியும் என்று தற்போது நம்புகிறேன் .


 பருவநிலை மாற்றம் என்பது உலகளவில் மிகப்பெரிய பிரச்னை. இயற்கைக்கு பாதிப்பை உண்டாக்குவது குற்றம் என்று இந்தியமக்கள் நம்புகின்றனர். செடிகளில் கடவுளையும், நதிகளில் தாயையும் அவர்கள் காண்கின்றனர். இத்தகைய நாட்டில், பருவ நிலை மாற்றப் பிரச்னைக்குத் தீர்வுகாண முடியாதா? இதேபோல், எரிசக்திப் பிரச்னைக்கு எத்தனாலைப் பயன்படுத்துவதன் மூலம் எவ்வாறு தீர்வுகாணலாம் என்பது குறித்து ஆராய்ச்சி நடத்தப்பட வேண்டும். புதுப்பிக்கத் தக்க எரிசக்தியை அதிகளவில் பயன் படுத்தும் முறை குறித்தும் ஆராய்ச்சி நடத்தப்பட வேண்டும். சூரிய மின் சக்தியை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என்ற நமது லட்சியத்தை அடைவதற்கான தொழில் நுட்பமும் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.

பனாரஸ் ஹிந்து பல்கலைக் கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேசியது

Leave a Reply