ஏற்றுமதியாளர்களுக்கு 2018 ஏப்ரல் முதல் இ வேலட் அறிமுகம் செய்யப்படும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.


கடந்த ஜூலை மாதம் முதல் நாடுமுழுவதும் ஜி.எஸ்.டி முறை அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் மத்திய நிதி அமைச்சர் தலைமையில் மாநில நிதி அமைச்சர்களின் கூட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது புதுடில்லியில் 22-வது கூட்டம் நடைபெற்றது.


பின்னர் அவர் பேசியதாவது: வரிவசூல் குறித்த தெளிவான தகவல்கள் எனக்கு கிடைக்க வில்லை. ஜி.எஸ்.டி நடைமுறைப்படுத்தப்பட்டு இரண்டு மாதங்களே ஆவதால் இந்தபிரச்னை என கூறினார். மேலும் 2018 ஏப்., முதல் ஒவ்வொரு ஏற்றுமதியாளர்களுக்கும் இ வேலட் அறிமுகம் செய்யப்படும். வணிகசின்னம் இல்லாத ஆயுர்வேத மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி குறைக்கப்பட்டுள்ளது. கைத்தறி நூல்களுக்கான ஜிஎஸ்.டி 18 சதவீதத்தில் இருந்து 12 ஆக குறைக்கப்பட்டுள்ளது.ஆயுர் வேத மருந்துகளுக்கு ஜிஎஸ்.டி 12சதவீதத்தில் இருந்து 5 ஆக குறைக்கப் பட்டுள்ளது. எழுது பொருட்களுக்கான ஜி.எஸ்.டி 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. டீசல் இன்ஜின் உதிரி பாகங்களுக்கு ஜி.எஸ்.டி, சலுகை வழங்கப்பட்டுள்ளது .சரக்குகளை கொண்டுசெல்ல இ-வே பில் ஜனவரி முதல் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும். 27 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வரி குறைக்கப் பட்டுள்ளது என கூறினார்.

Leave a Reply