நாட்டின் 70-ஆவது சுதந்திர தினத்தை யொட்டி, நாடுமுழுவதும் மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்த தலைவர்கள் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஒருவார கால மூவர்ணக் கொடி யாத்திரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப்பெற்றது.

நாட்டின் தேசிய உணர்வுக்கு எதிராக சிலர் சதிசெய்து வரும் நேரத்தில், தேசிய ஒருமைப்பாடு, ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றைப் பரவச்செய்ததில் இந்தயாத்திரை முக்கியப் பங்குவகித்தது.

நாட்டின் வளர்ச்சிக்காக நாங்கள் தொடர்ந்து பாடுபட்டுவரும் வேளையில், அதை விரும்பாத சிலர், எங்களின் கவனத்தையும், மக்களின் கவனத்தையும் திசைதிருப்ப முயலுகின்றனர்.

ஏழைகளின் நலனுக்காகவே அர்ப்பணிக்கப் பட்டது எனது தலைமையிலான அரசு. சமூகத்தின் அனைத்துதரப்பு மக்களின் வளர்ச்சிக்காகவும் பாடுபடவேண்டுமென பாஜக தலைவர்களை இந்தநேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

கடைசி மனிதனும் முன்னேறவேண்டும் என்ற நோக்கத்துடன் வாழ்ந்தவர் ஜன சங்கத்தின் (பாஜகவின் முந்தைய வடிவம்) தலைவரான தீனதயாள் உபாத்யாய. அவரது நூற்றாண்டு பிறந்த தினவிழா தொடங்கும் அடுத்த மாதம் 25-ஆம்தேதி தொடங்குகிறது. அன்றைய தினம், அவரது கனவை நனவாக்கும் வகையில் ஏழை மக்களின் நலனுக்கான திட்டங்கள் தொடங்கப்படவுள்ளன

பாஜக உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது

Tags:

Leave a Reply