இந்திய தொழில் நுட்பக் கழகங்களில் (ஐஐடி) அமைக்கப்பட்டுள்ள ஆராய்ச்சி பூங்காக்களின் செயல்பாட்டை கண்காணிக்க விரைவில் குழு அமைக்கப்படும் என மத்தியமனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.


சென்னை ஐஐடி-யில் உள்ள ஆராய்ச்சிப்பூங்காவில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் சர் சி.வி.ராமன் கருத்தரங்கு கூடத்தைத் வியாழக்கிழமை தொடங்கிவைத்து, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசியது:

 

உலகின் தலைசிறந்த ஹார்வர்ட், எம்ஐடி, ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழக ஆராய்ச்சிப் பூங்காக்களின் வரிசையில், இந்தியாவின் முதல்கல்வி நிறுவன ஆராய்ச்சிப் பூங்காவான சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்காவும் விளங்கி வருகிறது.


கல்வி நிறுவனம் மற்றும் தொழில் நிறுவனங்கள் இணைந்த ஆராய்ச்சிக்கான உண்மையான இலக்கணமாக, இந்த ஆராய்ச்சிபூங்கா திகழ்கிறது. இதன் காரணமாக, பல தொழில் நிறுவனங்களும், பல்கலைக் கழகங்களும் வெளிநாடுகளில் ஆரய்ச்சிக்காக முதலீடு செய்வதை தவிர்த்து, இந்தியாவிலேயே முதலீடு செய்யத் தொடங்கியுள்ளன.


சென்னை ஐஐடி-யைத் தொடர்ந்து மேலும் பல ஐஐடிக்களில் ஆராய்ச்சிப் பூங்கா தொடங்க மத்திய அரசு சார்பில் நிதி அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், சென்னை ஐஐடி ஆராய்சிப் பூங்காவைப்போல, மற்ற ஐஐடி ஆராய்ச்சிப் பூங்காக்களும் செயல்படுவதை உறுதிப்படுத்த குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது என்றார் அவர். இந்த நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:

Leave a Reply