ஐஐடி கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்கள் எடுக்கும் பாடவகுப்புகளை வீட்டில் இருந்தபடியே மாணவர்கள் நேரலையாக கேட்கவசதியாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 32 டிடிஎச் சேனல்களை தொடங்கவுள்ளது.

இதற்காக ஜிசாட்வரிசை செயற்கைகோளில் இரு டிரான்ஸ் பான்டர்களை ஒதுக்க இந்திய விண்வெளிதுறை ஒப்புக்கொண்டுள்ளது. இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக மூத்தஅதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘உயர்தர கல்வி அனைவருக்கும் கிடைக்க ஏதுவாக விண்வெளி தொழில் நுட்பத்தை பயன் படுத்துவதில் அரசு கவனம் செலுத்திவருகிறது. சென்னை, மும்பை, டெல்லி, காரக்பூர், கான்பூர், குவாஹாட்டி ஆகிய 6 ஐஐடிக்கள் உள்பட நாட்டின் 10 கற்பித்தல் முனையங்களில் உள்ள வகுப் புறைகளில் எடுக்கப்படும் பாட வகுப்புகளை 32 டிடிஎச் சேனல்கள் மூலம் ஒளிபரப்ப திட்டமி ட்டுள்ளது’’ என்றார்.

சேனல்கள் வழியாக பாட வகுப்புகளை நேரலையாக மாணவர்களுக்கு கொண்டுசேர்க்கும் இந்ததிட்டத்தில் மேலும் 12 கல்வி நிறுவனங்கள் இணையவுள்ளன.

ஆகஸ்ட்மாதம் முதல் இந்தசேனல்கள் ஒளிபரப்பாகலாம் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தூர்தர்ஷனின் டிஷ் டிடிஎச் மூலம் இந்த சேனல்கள் இலவசமாக கிடைக்கும்.

Tags:

Leave a Reply