பீகார் மாநிலத்தில் லாலுவின் ராஷ்டீரிய ஜனதாதளத்துடன் கூட்டணி சேர்ந்து நிதிஷ் குமார் ஆட்சி அமைத்தார். லாலு குடும்பத்தினர் மீது ஊழல் குற்றச் சாட்டு எழுந்ததால் நிதிஷ் குமார் அந்த கூட்டணியில் இருந்து விலகினார். பாரதிய ஜனதா தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணியுடன் சேர்ந்து அவர் மீண்டும் ஆட்சி அமைத்தார்.

இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமாறு நிதிஷ்கு மாருக்கு பா.ஜனதா தலைவர் அமித்ஷா அழைப்பு விடுத்தார். இருவர் இடையே நடந்த சந்திப்பின் போது இதைவலியுறுத்தினார்.

இதையேற்று ஐக்கிய ஜனதா தளம் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில்சேருகிறது. இதுகுறித்து வருகிற 19-ந்தேதி முடிவு செய்கிறது.

மோடி தலைமையிலான மத்தியமந்திரி சபையிலும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி இடம்பெறுகிறது.

மத்திய மந்திரிகள் மீது ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு 3 இடங்கள் கொடுக்கப் படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிதிஷ்குமாரின் விசுவாசிகளான ஆர்.சி.பி.சிங், ராம்நாத் தாகூர், ஹரிவனிஷ் ஆகிய 3 பேருக்கு மத்தியமந்திரி பதவி வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த மூவரும் டெல்லி மேல்-சபை எம்.பி.க்களாக உள்ளனர்.

Leave a Reply