ஐந்தாவது சர்வதேச சைபர்பாதுகாப்பு மாநாட்டை, பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் நாளை தொடங்கி வைக்கிறார். பொருளாதார மற்றும் வளர்ச்சிசார்ந்த ஒத்துழைப்பு களுக்காக 97 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட OECD கூட்டமைப்பு 2011ம் ஆண்டு லண்டனில் அமைக்கப் பட்டுள்ளது.

இதுவரை நான்கு சர்வதேச மாநாடுகள் நடைபெற்றுள்ள நிலையில், இந்தகூட்டமைப்பின் சார்பில் சைபர் குற்றங்கள், சைபர் வெளிபாதுகாப்பு தொடர்பான உச்சி மாநாடு முதன் முறையாக டெல்லியில் உள்ள ஏரோசிட்டி வளாகத்தில் இரண்டுநாட்களும் நடைபெறுகிறது. பிரதமர் மோடி நாளை தொடங்கிவைக்கும் இம்மாநாட்டில், மத்திய அமைச்சர்களும் பங்கேற்கின்றனர். பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா கனவை நன வாக்கும் முயற்சியாக இந்த மாநாட்டை இந்தியா இந்த ஆண்டு முன்னெடுத்து நடத்துகிறது.

இந்தியாவை வலிமையான டிஜிட்டல் அதிகாரம்படைத்த நாடாக மாற்றவேண்டும் என்பதே பிரதமரின் இலக்கு என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு சைபர் ஃபார் ஆல் என்ற கருத்தரங்கு நடைபெறுகிறது. இதில் சர்வதேசதலைவர்கள், விஞ்ஞானிகள், சிந்தனையாளர்கள், தொழில்வல்லுனர்கள், சைபர் நிபுணர்கள் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.

சைபர் கொள்கையில் மனித உரிமைகளை பாதுகாப்பது தனியார் துறையி னருக்கும் தொழில் நுட்பத் துறையினருக்கும் சைபர் வெளியில் பாதுகாப்பு அளிப்பது ஆகியவை முக்கிய விவாதப் பொருட்களாக உள்ளன.


சர்வதேச அளவில் சைபர் குற்றங்களை தடுக்கவும் இந்தமாநாடு நடவடிக்கைகளை பரிந்துரைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply