இந்தியாவில் தோன்றிய ஒரு பழமையான கலை தான் யோகா. இந்த யோகாவின் மகத்துவத்தை உலகின் பல பகுதிகளிலும் வாழும் மக்கள் புரிந்து, அன்றாடம் மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வாழ்நாளின் அளவை நீட்டிக்கவும் உதவும் ஒருசில யோகாசனங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

 

மேலும் யோகாசனம் வெறும் நிலை என்று நினைத்தால் அது தவறு. அதில் சில யோக முத்திரைகளும் உள்ளன. ஒவ்வொரு யோக முத்திரைகளும் ஒவ்வொரு நன்மையை உள்ளடக்கியுள்ளது. உதாரணமாக ஞான முத்திரை, கவனம் செலுத்த மற்றும் அறிவைப் பெருக்க உதவுகிறது. அதேப்போல் வாயு முத்திரை, உடலில் வாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு நல்ல தீர்வை வழங்கும்.

 

 
ஆரோக்கியமான மூளைக்கு: விருக்ஷாசனம்
 

 

 

ஆரோக்கியமான மூளைக்கு: விருக்ஷாசனம்

மூளை ஆரோக்கியமாக செயல்படுவதற்கு, படத்தில் காட்டியவாறு நேராக நின்று, வலது காலை மடித்து, இடது காலின் தொடையில் வைத்து, கைகளை தலைக்கு மேலே தூக்கி கூப்பி நேராக நிற்க வேண்டும்.நீரிழிவு நோயாளிகளுக்கு: மயூராசனம்

 

 

 

 

நீரிழிவு நோயாளிகளுக்கு: மயூராசனம்

இது மற்றொரு முக்கியமான ஆசனம். இந்த ஆசனம் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. இதற்கு படத்தில் காட்டியவாறு உள்ளங்கையை தரையில் ஊற்றி, முழு உடலையும் தரையில் இருந்து மேலெழுப்பி, முழங்கையால் தாங்கி இருக்க வேண்டும். இப்படி செய்வதால் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, செரிமானமும் அதிகரிக்கும்.

 
 
சுவாச பிரச்சனைக்கு: பிராண முத்திரை

சுவாச பிரச்சனைக்கு: பிராண முத்திரை

யோகா முத்திரைகள் யோகாசனத்தின் ஒரு பாகமாகும். அதிலும் பிராண முத்திரை செய்தால், சுவாசம் சீராகும். மேலும் இது பிராணயாமத்திற்கு சமமானது. மேலும் இந்த பிராண முத்திரையினால் மூளைக்கு இரத்த ஓட்டமும், பிராண வாயுவும் சீராக செல்வதால், சுறுசுறுப்புடனும் செயல்படலாம். இந்த ஆசனம் செய்வதற்கு, மோதிர விரலை மடக்கி சுண்டு விரலின் நுனியோடு சேர்த்து, கட்டை விரலின் நுனியை அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இப்படி 20 நிமிடம் இந்த முத்திரையில் இருக்க வேண்டும்.

 
சூரியநமஸ்காரம்

சூரியநமஸ்காரம்

சூரியநமஸ்காரத்தில் 12 நிலைகள் உள்ளன. தினமும் இந்த 12 நிலைகளையும் ஒருவர் செய்து வந்தால், அவர்கள் உடலின் ஒவ்வொரு பாகங்களும் ஆரோக்கியமாக செயல்படுவதோடு, வலிமையுடனும் இருக்கும்.

 
செரிமான பிரச்சனைக்கு: வஜ்ராசனம்

செரிமான பிரச்சனைக்கு: வஜ்ராசனம்

செரிமான பிரச்சனை உள்ளவர்கள், வஜ்ராசனம் செய்து வருவதன் மூலம் நல்ல தீர்வைக் காண முடியும். அதற்கு முதலில் கால்களை நேராக நீட்டி உட்கார்ந்து, பின் படத்தில் காட்டியவாறு கால்களை மடக்கி நேராக உட்கார்ந்து, இரண்டு கைகளையும் முழங்காலின் மீது வைத்து, 5-10 நிமிடம் உட்கார வேண்டும்.

 
வாய்வு பிரச்சனை: பவன முக்தாசனம்

வாய்வு பிரச்சனை: பவன முக்தாசனம்

இந்த ஆசனத்திற்கு, முதலில் தரையில் மல்லாந்து படுத்து, உள்ளங்கைகளை தரையில் பதித்து, கால்களை நேராக மேலே தூக்கி, பின் வயிற்றின் மீது வைத்து, இரண்டு கைகளாலும் கால்களின் முட்டிகளைப் பிடித்துக் கொள்ள வேண்டும். இந்த ஆசனத்தின் போது மூச்சை சாதாரணமாக விடலாம். மேலும் இந்த ஆசனத்தை தினமும் 3 முறை செய்து வந்தால், செரிமானம் மற்றும் வாய்வு பிரச்சனையைப் போக்கலாம்.

 
முதுகு வலி: பாலாசனம்

முதுகு வலி: பாலாசனம்

முதுகு வலியால் கஷ்டப்படுபவர்கள், தினமும் பாலாசனம் செய்வது நல்ல பலனைத் தரும். அதற்கு முழங்கால் போட்டு உட்கார்ந்து, நெற்றியால் தரையை தொட்டு, படத்தில் காட்டியவாறு உள்ளங்கைகள் மேல் நோக்கி இருக்குமாறு வைத்து, 2-3 நிமிடம் இருக்க வேண்டும். பின் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். இந்த மாதிரி தினமும் 5-10 முறை செய்து வருவது சிறந்தது.

 
அழகான பிட்டத்திற்கு: நடராஜாசனம்

அழகான பிட்டத்திற்கு: நடராஜாசனம்

உங்களுக்கு பிட்டம் மட்டும் பெரியதாக உள்ளதா? அப்படியெனில் அதனை அழகாக வைத்துக் கொள்ள தினமும் நடராஜாசனம் செய்து வாருங்கள். அதற்கு படத்தில் காட்யவாறு, வலது காலைத் தூக்கி, வலது கையால் பிடித்து, முன்னோக்கி குனிந்து, இடது கையை முன்னே நீட்ட வேண்டும். இப்படி 60 நொடிகள் இருக்க வேண்டும். இதுப்போன்று மற்றொரு காலில் செய்ய வேண்டும். இப்படி செய்வதால், பிட்டத்தை அழகாக பராமரிக்கலாம்.

 
நிம்மதியான தூக்கம்: ஹலாசனம்

நிம்மதியான தூக்கம்: ஹலாசனம்

இந்த ஆசனத்தை தினமும் தூங்க செல்லும் முன் செய்து வந்தால், முதுகு மற்றும் கால் தசைகள் ரிலாக்ஸ் ஆகி, இரவில் நல்ல தூக்கம் கிடைக்கும். இந்த ஆசனம் செய்வது எளிதல்ல. ஆனால் நிம்மதியான தூக்கத்தைப் பெற வேண்டுமானால், இந்த யோகாசனத்தைச் செய்யுங்கள்.

 
கழுத்து மற்றும் தோள்பட்டை வலி: மத்யாசனம்

கழுத்து மற்றும் தோள்பட்டை வலி: மத்யாசனம்

இந்த ஆசனம் செய்வதற்கு, முதலில் பத்மாசன நிலையில் அமர்ந்து, கைகளை பிட்டத்திற்கு அடியில் வைத்து, மெதுவாக பின்னோக்கி சாய்ந்து, தலையை ஊன்ற வேண்டும். இப்படி செய்வதால், கழுத்து மற்றும் தோள்பட்டை வலி நீங்கும் மற்றும் சுவாச பிரச்சனைகளும் குணமாகும். ஆனால் உயர் அல்லது தாழ் இரத்த அழுத்தம் கொண்டவர்கள் இந்த ஆசனம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். அதேப்போல் முக்கியமாக இந்த ஆசனத்தை கடுமையான கழுத்து மற்றும் தோள்பட்டை வலி கொண்டவர்கள் தவிர்க்க வேண்டும்.

 
முதுகு வலி: பிட்டிலாசனம்

முதுகு வலி: பிட்டிலாசனம்

படத்தில் காட்டியவாறு பிட்டிலாசனத்தை தினமும் செய்து வந்தால், உடலின் அனைத்து பாகங்களும் நீட்சியடைவதோடு, முதுகு வலி இருந்தால், அதுவும் நீங்கும்.

 
மன அழுத்தம்: சிரசாசனம்

மன அழுத்தம்: சிரசாசனம்

சிரசாசனம் என்னும் தலை கீழாக நிற்கும் ஆசனம் செய்வதன் மூலம், மூளைக்கு இரத்த ஓட்டம் அதிகரித்து, அதனால் மூளையின் செயல்பாடு மற்றும் ஞாபக சக்தி அதிகரித்து, மன அழுத்தம் நீங்கவும் செய்யும். மேலும் இந்த ஆசனம் செய்தால், கண் பிரச்சனைகள் நீங்கி, பார்வை மேம்படும்.

 
பிரசவத்திற்கு பின் எடை குறைய: அர்த மட்சயேந்திராசனம் (Ardha Matsyendrasana)

பிரசவத்திற்கு பின் எடை குறைய: அர்த மட்சயேந்திராசனம் (Ardha Matsyendrasana)

படத்தில் காட்டிய அர்த மட்சயேந்திராசன நிலையானது, பிரசவத்திற்கு பின் உடல் எடையைக் குறைக்க நினைக்கும் பெண்களுக்கு ஏற்றது. மேலும் இந்த யோகாசனமானது தண்டுவடத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, முதுகு, இடுப்பி, அடிவயிறு மற்றும் தோள்பட்டை பிட்டாக இருக்கவும் உதவும்.

 
தலை வலி: பிரசரித பதோத்தனாசனம் (Prasarita Padottanasana)

தலை வலி: பிரசரித பதோத்தனாசனம் (Prasarita Padottanasana)

பிரசரித பதோத்தனாசனம் செய்வதன் மூலம் தலை வலி குறையும். அதற்கு கால்களை பக்கவாட்டில் விரித்து நின்று, படத்தில் காட்டியவாறு முன்னோக்கி குனிய வேண்டும். இதனால் தலையில் இரத்த ஓட்டம் அதிகரித்து, தலை வலி நீங்குவதோடு, கால்களும் வலிமையடையும்.

 
கர்ப்பிணிகளுக்கு: தடாசனம்

கர்ப்பிணிகளுக்கு: தடாசனம்

கர்ப்பிணிகள் படத்தில் காட்டியவாறு நேராக நின்று, கைகளை தலைக்கு மேலே உயர்த்தி, இரு கைகளின் விரல்களையும் இணைத்து, மேலே ஸ்ரெட்ச் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம், உடல் மற்றும் இடுப்பு பகுதிகள் வலிமையடையும்.

Leave a Reply