“நாட்டின் வளர்ச்சி குறைந் திருக்கலாம் ஆனால் ஒருபோதும் பொருளாதாரம் சரிவுக்குள் விழாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.”,

“நாடாளுமன்ற மாநிலங்களவையில், நாட்டின் பொருளாதாரநிலை குறித்த கேள்விக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நாட்டின் வளர்ச்சி குறைந்தி ருக்கலாம் ஆனால் ஒருபோதும் பொருளாதாரம் சரிவை சந்திக்காது. பொருளாதாரத்தில் மறு மலர்ச்சியை ஏற்படுத்த பட்ஜெட்டில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பலனைகொடுக்க தொடங்கி விட்டன. மேலும், மோட்டார்வாகன துறை உள்பட பலதுறைகள் மந்தநிலையிலிருந்து மீண்டுவரும் அறிகுறிகள் தென்படுகின்றன.

இந்த ஆண்டின் முதல் 7 மாத (ஏப்ரல்-அக்டோபர்) நேரடி வரி மற்றும் ஜி.எஸ்.டி. வசூல் நிலவரத்தை சென்ற ஆண்டின் இதேகாலத்துடன் ஒப்பிட்டு பார்த்தால் வசூல் அதிகரித்துள்ளது.காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2 ஆட்சிகாலத்துடன் ஒப்பிடும்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் முதல் ஐந்தாண்டு காலத்தில் பண வீக்கம் கட்டுப்பாட்டு இலக்கை காட்டிலும் குறைவாக இருந்தது மேலும் பொருளாதாரமும் நல்லவளர்ச்சி கண்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.”,

Comments are closed.