ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கருத்தை எதிர்கட்சிகள் எதிர்க்க வில்லை என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், ‘ஒரே நாடு ; ஒரே தேர்தல்’ குறித்த அனைத்து கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம் புதுடில்லியில் இன்று நடைபெற்றது.

கூட்டமுடிவில் மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியதாவது: பெரும்பாலான கட்சிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தன. அதேநேரத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கருத்தை அவர்கள் எதிர்க்கவில்லை . மேலும் நாங்கள் 40 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தோம், அதில் 21 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர், மேலும் 3 கட்சிகள் இந்த விஷயங்களில் தங்கள் கருத்தை எழுத்துப் பூர்வமாக அனுப்பியுள்ளன என்றார்.

Comments are closed.