கர்நாடகாவில், சட்ட சபை தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி பங்கேற்ற, பா.ஜ., பிரசார கூட்டம், மைசூரில் நடந்தது. இதில், அவர் பேசிய தாவது:
கர்நாடகாவில், சித்தராமையா தலைமை யிலான, காங்., அரசு, 10 சதவீத கமிஷன் வாங்கும் அரசாக செயல் படுவதாக, சமீபத்தில் குற்றம்சாட்டினேன். பலர், என்னை போனில் அழைத்து, நீங்கள் தவறானதகவலை சொல்லி விட்டீர்கள் என்கின்றனர்.

கர்நாடக அரசு வாங்கும் கமிஷன், அதைவிட அதிகம் என்கின்றனர். இதன் மூலம், ஆளும் கட்சி மீது, கர்நாடக மக்களுக்கு உள்ள கோபத்தை புரிந்துகொள்ள முடிகிறது.ஒருமாநிலத்துக்கு, நல்ல குறிக்கோள் உள்ள அரசுதான் தேவை. கமிஷன் வாங்கும் அரசு தேவை இல்லை. காங்., அமைச்சர்கள் மீது, ஒவ்வொரு நாளும், புதுப்புது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.இந்தகூட்டத்தில், பெங்களூரு – மைசூரு இடையே, 117 கி.மீ.,க்கு, 6,400 கோடி ரூபாய் செலவில், ஆறு வழிச்சாலை அமைக்கப்படும் என்றும், மைசூரில், 800 கோடி ரூபாய் செலவில், உலகத்தரத்தில் செயற்கைகோள் ரயில்வே ஸ்டேஷன் அமைக்கப்படும் என்றும், பிரதமர் அறிவித்தார்.

Leave a Reply