கர்நாடக சட்டப் பேரவைக்கு விரைவில் தேர்தல்நடக்க உள்ளது. இந்நிலையில் பாஜக தேசியதலைவர் அமித்ஷா மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து நிர்வாகிகள்கூட்டம் மற்றும் பொதுக் கூட்டங்களில் பேசி வருகின்றார்.

பந்த்வால் பகுதியில் இன்று நடந்த கட்சிநிர்வாகிகள் கூட்டத்தில் பேசியவர் “தொகுதியில் வேட்பாளர் யார் என்பதை கண்டுகொள்ள வேண்டாம். கட்சியின் சின்னமான தாமரையையும், மோடியின் புகைப் படமும் போதும். சட்டப் பேரவைத்தொகுதி உங்களது இலக்கு அல்ல. ஒவ்வொரு வாக்குச் சாவடியுமே நமது இலக்கு என்று  பேசினார்.

மேலும், ஒவ்வொரு பூத்திலும் வெற்றிபெறும் பட்சத்தில் நாம் முழுமையான வெற்றிபெறலாம். 4 கோடி வாக்களர்களிடம் நீங்கள் செல்லவேண்டும் எனவும் அமித்ஷா கூறினார்.

Leave a Reply