கன்னியாகுமரி அருகே 60 கிலோ மீட்டர் தொலைவில் உருவாகியுள்ள ஓகி புயல் சின்னம் காரணமாக சூறாவளிக் காற்று வீசும். ஆனால், இந்த புயல் கரையைக் கடக்க வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதாவது, வங்கக் கடலில் உருவாகியுள்ள இந்த ஓகி புயல் சின்னமானது, கன்னியாகுமரிக்கு சரியாக கிழக்கு திசையில் அதாவது கீழ் பகுதியில் மையம் கொண்டுள்ளது.

இந்த புயல் சின்னம் மெல்ல நகர்ந்து மேற்கு திசை நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால், இது கன்னியாகுமரி அல்லது கேரளா எல்லைப் பகுதியில் கரையைக் கடக்காமல், கடல்பரப்பிலேயே சுற்றிச் சுழன்று லட்சத்தீவுகளுக்கு அருகே சென்று வலுவிழக்கும் வாய்ப்பு உள்ளது.

ஆனாலும், இந்த புயல் சின்னம் நகரத் தொடங்கியதும் தமிழகத்தின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், புயல் கரையைக் கடப்பதால் ஏற்படும் எந்த அபாயமும் இந்த மாவட்டங்களுக்கு ஏற்படாது.

இந்த படத்தில் கூறப்பட்டிருப்பது போல, கன்னியாக்குமரிக்குக் கீழே அதாவது தென் திசையில் cs  என்று குறிப்பிட்டிருக்கும் புள்ளியில் உருவாகியிருக்கும் ஓகி புயல், மேற்கு திசையில் நகர்ந்து scs என்று பயணிக்க உள்ளது. இதனால்தான் இந்த புயல் சின்னமானது கரையைக் கடக்காது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

புயல் சின்னம் உருவாகியிருப்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, நேற்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 8.30 மணியளவில் புயலாக வலுவடைந்து கன்னியாகுமரிக்கு அருகே 70 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.

ஆற்காடு பஞ்சாங்கம் இந்த ஆண்டு ஏற்பட வாய்ப்புள்ள புயல், மழை, நிலநடுக்கம் பற்றி பயமுறுத்தும் தகவல்களைக் கூறியுள்ளது. ஹேவிளம்பி ஆண்டுக்கான ஆற்காடு ஸ்ரீ சீதாராமஹனுமான் சர்வ முகூர்த்த பஞ்சாங்கத்தில், "இந்த ஆண்டு முக்குறுணி மழை பெய்யும். 10 பங்கு சமுத்திரத்திலும் 6 பங்கு காடுகளிலும் 4 பங்கு பூமியிலும் பெய்யும். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் கடல் கொந்தளிப்பும், கடல் சீற்றங்களும் ஏற்படும்." என்று கூறப்பட்டுள்ளது.

இந்த புயலுக்கு ஓகி  என்று பெயரிடப்பட்டுள்ளது. இது நகர்ந்து லட்சத்தீவை நோக்கி நகரக் கூடும். இதன் காரணமாக அடுத்து வரும் 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை, தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும். 

கன மழையைப் பொறுத்தவரை தென் தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிகக் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வேலூர், தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கன மழை பெய்யக் கூடும்.

 

 

 

Tags:

Leave a Reply