ஓட்டின் சக்தியை இளைஞர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.2017 வருடத்தின் கடைசி மன்கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: மன் கி பாத் நிகழ்ச்சி எனக்குபெரிதும் உதவியது. இதன் மூலம் மக்களின் எண்ணங்கள் எனக்கு கிடைத்தன. அவர்களுடன் என்னை தொடர்பில் வைத்தது. இயேசுநாதர் உலகத்திற்காக சேவை செய்தார். சேவையே இந்தியாவின் கலாசாரமாக உள்ளது. புதிய இந்தியாவுக்காக இளைஞர்கள் கடுமையாக உழைக்கவேண்டும். வறுமை, ஜாதி, மதம், பயங்கரவாதம், ஊழலில் இருந்து விடுபட்ட புது இந்தியா உருவாக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்காக இந்தியா உழைக்க வேண்டும்.

 

21ம் நூற்றாண்டில் பிறந்த இளைஞர்கள், 2018 ஜூன் 1ல் வாக்காளர்களாக தகுதிபெற்றவர்கள். புதிய வாக்காளர்களை ஜனநாயகம் வரவேற்கிறது. ஓட்டின் சக்தியை இளைஞர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். ஓட்டு போடுவது ஜனநாயகத்தில் பெரியசக்தியாக உள்ளது. லட்சகணக்கான மக்களின் வாழ்க்கையில் நல்ல மா்றம் ஏற்பட ஓட்டு மிகவும் முக்கியமாக உள்ளது. இளைஞர்கள் பயங்கரவாதத்தை நிராகரித்துள்ளனர். காஷ்மீர் இந்தியாவுடன் ஒன்று பட்ட மாநிலமாக உள்ளது.

 

நகர்ப்புறங்களில் சுத்தம்குறித்து 2018 ஜன.,4 முதல் மார்ச் வரை ஆய்வு செய்யப்படும். 2018 குடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக வரும் ஆசியான் நாட்டு தலைவர்களை இந்தியா வரவேற்கிறது. குடியரசு தினவிழாவில் நிறைய தலைவர்கள் பங்கேற்பது இதுவே முதன் முறையாகும். அதுபோன்ற ஒருநிகழ்ச்சி இந்திய வரலாற்றில் இது வரை நடந்தது இல்லை. இந்தியர்கள் அனைவரும் பெருமைகொள்ள வேண்டிய விஷயம் அது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதிரி பார்லிமென்ட் நடத்தலாம். அதில் 18 முதல் 25 வயதுடைய இளைஞர்கள் பங்கேற்று புது இந்தியா உருவாக்க தேவையான கொள்கை, அதற்கான திட்டம், 2022க்குள் எப்படி இதனை நிறைவேற்றலாம், நமது சுதந்திர போராட்ட வீரர்கள் கனவு கண்ட நாட்டை உருவாக்குது குறித்து ஆலோசனை நடத்தலாம்.
 

முஸ்லிம் பெண்கள் ஹஜ் யாத்திரைக்கு செல்லவேண்டுமானால், ஆண் துணையுடன் செல்லவேண்டும் என்ற விதி இருந்தது. பெண்களுக்கு பாகுபாடுகாட்டும் இந்த விதி தளர்த்தப்பட்டதால், ஹஜ் புனிதயாத்திரைக்காக தனியாக செல்ல சுமார் 1,300 பெண்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். நீண்டபோராட்டத்திற்கு பிறகு, முத்தலாக் பிரச்னையிலிருந்து விடுதலை முஸ்லிம் பெண்களுக்கு ஒருவழி கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply