ஓபிசி பிரிவினருக்கான வருமான உச்சவரம்பான கிரிமிலேயரை, 6 லட்ச ரூபாயில் இருந்து 8 லட்ச ரூபாயாக உயர்த்த, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடர்பாக டெல்லியில் செய்தியா ளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, கிரிமி லேயர் உயர்த்தப் பட்டதன் மூலம், ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய்வரை வருமானம் பெறுவோர் இடஒதுக்கீட்டு பலன்களை பெற முடியும் என்றார்.

மேலும் ஓபிசி பிரிவின் கீழ் வரும் அனைத்து சமூகத்தினரும் இட ஒதுக்கீட்டு பலன்களை பெறும் வகையில், ஓபிசி பிரிவில் 3 உட்பிரிவுகளை கொண்டுவருவது குறித்து, மத்திய அரசு பரீசிலித்து வருவதாகவும் அவர்குறிப்பிட்டார்.

இதுகுறித்து ஆராய ஆணையம் அமைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாகவும் அருண் ஜெட்லி மேலும் தெரிவித்தார்.

Leave a Reply