பதவிமுடிந்து பிரியாவிடை அளிக்கும் துணைக் குடியரசுத் தலைவர் ஹமித் அன்சாரி நாட்டில் முஸ்லிம்கள் நிலை குறித்து கூறிய கருத்து பாஜகவினரிடையே கடும்கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லிம்களிடையே ஒருவாறான ‘அமைதியின்மையும் பாதுகாப் பின்ம்மையும்’ இருப்பதாக ஹமித் அன்சாரி தெரிவித்ததே  கொந்தளிப்புக்குக் காரணம்.

பாஜக பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வார்கியா, கூறும்போது, “நான் அவரதுகருத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஓய்வுபெறும்போது அவர் அரசியல் கருத்தைத் தெரிவித்திருக்கிறார். அவர் இன்னமும் கூட துணை ஜனாதிபதிதான் எனவே அவரது பதவிக்கு அவரதுகருத்து கண்ணியம் சேர்க்கவில்லை. ஓய்வுபெற்ற பிறகு அரசியல் புகலிடம் பெற இவ்வாறு கூறியுள்ளதாகத் தெரிகிறது, இத்தகைய உயர் பதவியிலிருக்கும் ஒருவர் இம்மாதிரி சிறுமையான கருத்துகளை தெரிவிப்பார் என்று யாரும் எதிர்பார்த் திருக்க மாட்டார்கள்” என்றார்.

Leave a Reply