ராஜ்ய சபாவில் பதவிக் காலம் முடிந்த எம்.பி.,க்களுக்கான பிரிவு உபசாரவிழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது அவர், ஓய்வு பெறும் எம்.பி.,க்கள் நாட்டுக்காக மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி. ஓய்வுபெறும் எம்.பி.,க்கள் திறமையாக செயல்பட்டதை மறக்க முடியாது. குரியன் உள்ளிட்ட ஓய்வு பெறும் எம்.பி.,க்களின் செயல் பாடுகளை மறக்க முடியாது. அவையில் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார். பதவிகாலம் முடிந்தாலும் உங்களது சேவை நாட்டிற்கு தேவை. ஓய்வு பெறும் அனைத்து எம்.பி.,க்களும் தொடர்ந்து தங்களின் பங்களிப்பை நாட்டிற்கு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், அரசியல் வாதிகளுக்கு ஓய்வு என்பதே இல்லை. இது பிரிவு உபசார விழா மட்டும். பிரிக்கும் விழா அல்ல. எதிர்க்கட்சிகளாக தொடர்ந்து எங்களின் குரலை உயர்த்திக் கொண்டே இருப்போம். எம்.பி.,க்கள் ஜனநாயகத்தை காத்து வருகின்றனர் என்றார்.

Leave a Reply