தமிழக துணை முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலை பேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனி சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகிய இருவரின் அணிகள் இன்று இணைந்தன. இதையடுத்து அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. பன்னீர் செல்வத்துக்கு துணை முதல்வர், நிதி அமைச்சர் பதவியும், பாண்டிய ராஜனுக்கு தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறையும் வழங்கப்பட்டன. மாலை இருவருக்கும் தமிழக கவர்னர் வித்யா சாகர் ராவ்  பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். பின்னர் இருவரும் தலைமைச் செயலகத்தில் வந்து பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, துணை முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர் செல்வத்துக்கு தொலை பேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், தனது  ட்விட்டர் பக்கத்திலும் பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு வாழ்த்துகள் என பகிர்ந்திருந்தார்.

Leave a Reply