கடந்த, 2017 – 18 நிதியாண்டில், ரயில் விபத்து கள் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இது பற்றி, ரயில்வே உயர் அதிகாரிகள் கூறியதாவது: கடந்த, 2016 – 17 நிதியாண்டில், 104 ரயில்விபத்துகள் நடந்தன. ஆனால், 2017 – 18 நிதியாண்டில், 73 விபத்துகளே ஏற்பட்டுள்ளன. தண்டவாளங்கள் மேம்படுத்தப்பட்டதே விபத்துகள் குறையகாரணம். கடந்த ஆண்டில், 4,405 கி.மீ., துார ரயில் பாதை புதுப்பிக்கப்பட்டுள்ளது. 1960 – 61ல், 1,131; 1970 – 71ல், 840; 1980 – 81ல், 1,013; 1990 – 91ல், 532; 2010 – 11ல், 141 ரயில்விபத்துகள் ஏற்பட்டுள்ளன. கடந்த, 2016 – 17 நிதியாண்டில் நடந்த ரயில்விபத்தில், 607 பேர் இறந்தனர். 2017 – 18ல் ரயில்விபத்து எண்ணிக்கை, 254 ஆக குறைந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply