கடல்சார் பயங்கர வாதம் மிகபெரிய அச்சுறுத்தலாக விளங்குகிறது’’ என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நேற்று கடலோர பாதுகாப்பை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் ஆய்வுசெய்தார். முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உடன் இருந்தார். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, கோவா, மராட்டியம், குஜராத், மேற்குவங்கம் மற்றும் ஒடிசா ஆகிய 9 மாநிலங்களை சேர்ந்த கடற்படை உயர் அதிகாரிகளுடன் ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்தினார்.

இதில் டையு–டாமன், தாத்ரா–நாகர் ஹவேலி, லட்சத் தீவுகள் மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவுகள் ஆகிய 4 யூனியன் பிரதேச ங்களை சேர்ந்த பிரதிநிதிகளும் இடம்பெற்றிருந்தனர்.

அவர்கள் மத்தியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:–

கடல்சார் பயங்கரவாதம் நமக்கு மிகபெரிய அச்சுறுத்தலாக விளங்குகிறது. தவிர, பொருளாதாரத்தில் மிகபெரிய தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. நமது கடலோர காவல்படையை பிழையேற்படாததாகவும், அசைந்து கொடுக்காததாகவும் நாம் உருவாக்கவேண்டும்.

கடந்த 1993–ம் ஆண்டு வெடிபொருட்கள் ராய் காட்டுக்கு கடத்தி வரப்பட்டபோது, நமது கடலோர பாதுகாப்பின் பலவீனம் வெளிப்பட்டது. அதன்பிறகு, 2008–ம் ஆண்டு பயங்கர வாதிகள் மும்பையை தாக்கியபோது வெளிப்பட்டது.

இதைத் தொடர்ந்து, கடலோர பாதுகாப்பை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கடலோர பாதுகாப்பில் நிலவும் பல வீனங்களை அடையாளம் காணும் வகையில், அனைத்து பெரிய மற்றும் சிறிய துறை முகங்களிலும் பாதுகாப்பு தணிக்கை மேற்கொண்டு வருகிறோம் இவ்வாறு ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

Leave a Reply