கட்சியை விரிவுபடுத்தும் வகையில் மாநிலங்களவை எம்பி.க்கள் செயல்படவேண்டும் என மாநிலங்களவை பாஜக எம்.பிக்களுக்கு பிரதமர் அறிவுறித்தியுள்ளார்.
 
டெல்லியில் பாஜக மாநிலங்களவை எம்.பிக்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது பிரதமர்  கூறியதாவது:
 
புதிய சமூக ஊடகக்குழுக்களில் கட்சியை விரிவுபடுத்தும் வகையில் மாநிலங்களவை எம்.பி.க்கள் செயல்படவேண்டும்.  பாஜக அரசின் சாதனைகளைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் எடுத்துசெல்ல வேண்டும். மாநிலங்ளவை எம்.பி.க்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்கள் சார்ந்த பிரச்சினைகள் குறித்துத் தயக்கமின்றிப் பேசவேண்டும். 
 
இவ்வாறு அவர் பேசினார்.
 
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி,பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா, மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத்,மத்திய நிதிமந்திரி அருண்ஜெட்லி,  52 பாஜக மாநிலங்களவை  எம்.பி.க்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:

Leave a Reply