கதிராமங்கலத்தில் மக்கள் ONGC நிறுவனத்திற்க்கு எதிராக நடத்தும் போராட்டம் சார்ந்து நீங்கள் என்ன நினைக்கிறீர் மாரிதாஸ்? (கேள்வி : ஜெயகுமார்)

இந்தியாவில் கோவில்களை கம்முனிஸ்ட் ,  தொண்டு நிறுவனங்கள், போராளிகள் என்ற பெயரில் சில இயக்கங்கள் நாசம் செய்யும் வேலை நடக்கிறது என்று நினைக்கிறேன்.நான் கோவில் என்று கூறுவது 

 

Oil and Natural Gas Corporation (ONGC)

National Thermal Power Corporation (NTPC)

Coal India Limited(CIL)

Gas Authority of India Limited(GAIL)

Steel Authority of India Limited (SAIL)

Bharat Heavy Electricals Limited (BHEL)

Indian Oil Corporation Limited(IOCL)  இது போன்ற அரசு நிறுவனங்களை தான்.

 

உங்கள் அனைவருக்கும் HMT நிறுவனத்தின் watch நியாபகம் இருக்கும், உங்கள் தாத்தா இல்லை அப்பா இவர்களது விருப்பமான நிறுவனம் என்றால் அதுவாக தான் இருக்கும். இந்த இந்திய அரசின் நிறுவனம் இப்போ என்ன ஆச்சு???? தேடி படிக்கவும் எப்படி அழிக்கபட்டது என்று. 1970களில் இந்தியாவின் முதமை இடத்தில் இருந்த பொதுதுறை நிறுவனமான இந்த HMT நிறுவனம் கடந்த 40 வருடத்தில் எப்படி வீழ்ந்தது ? இந்தியா ஒரு கோவில் என்றால் அதன் கோபுர கலசம் HMT நிறுவனம் என்று நாடாளுமன்றத்திலேயே நேரு கூறியதுண்டு, ஏன் என்றால் அந்த அளவு லாபம் கொடுத்த நிறுவனம். அந்த கோபுரம் எப்படி சாய்கப்பட்டது?? எல்லாம் நம்ம கம்யுனிஸ்ட் தலைவர்களின் தொழில்சங்கத்தின் புண்ணியம் தான்.

 

இன்று இந்தியாவில் முதல் இடத்தில் இருக்கும் சிறந்த பொதுதுறை நிறுவனம் எது? அது இந்த ONGC நிறுவனம் தான். 

 

ஏறக்குறைய 40,000 ஊழியர்களுடன் ஆண்டுக்கு 30,000கோடி லாபத்துடன் இயங்கும் நிறுவனம். உலக அளவில் இந்தியாவிற்கு நமது ISRO போல் பெருமை சேர்க்கும் நிறுவனம் இது. அந்த அளவிற்க்கு தரமான நிறுவனம் என்று பெயர் எடுத்த நிறுவனம் இது.

 

இது உலக அளவில் முதல் 500 தலைசிறந்த நிறுவனங்கள் வரிசையில் எப்போதுமே இருந்து வந்துள்ள நிறுவனம். அது மட்டும் அல்ல ஆசியாவின் சிறந்த பொதுதுறை நிறுவனங்கள் வரிசையில் 5வது இடம் பிடித்த சிறந்த நிறுவனம். இந்திய அளவில் முதல் இடத்தில் இருக்கும் பொதுதுறை நிறுவனம் ஆகும். இவர்கள் எண்ணய் எரிவாயு சார்ந்த திட்டங்கள் இந்தியாவில் மட்டும் அல்ல உலகம் முழுவதும் செயல்படுத்துகிறார்கள். 

 

அதாவது பிரேசில் , கொலம்பியா , கியூபா ,மியான்மர் , லிபியா ,சூடான் என்று உலகம் முழுவதும் சென்று எரிவாயு எடுக்கும் திட்டங்களை மிக குறைந்த செலவில் எடுக்க அந்த அந்த நாடுகளுக்கு உதவும் நிறுவனம். இதன் மூலம் நம் நாட்டுக்கும் வருமானம் மட்டும்  அல்ல மற்ற நாடுகளுடனும் நம்மால் நல்ல வெளியுறவு கொள்கைகளை மேற்கொள்ள முடிகிறது. {ஒரு டெக்லாஜி சார்ந்த விசயத்தில் இந்தியாவை ஒரு நாடு சார்ந்து இருந்தால் அது இயற்க்கையாக இந்தியாவின் வலிமையை அதிகபத்தும் சரிதானே? அதாவது உலக அளவில் மிக குறைந்த செலவில் விண்வெளிக்கு செயற்க்கை கொள்களை இஸ்ரோ அனுப்புவதால் நம்மை எல்லா நாடுகளும் நாடுவதால் இயற்க்கையாக யாரும் பகைத்து கொள்ள விரும்பமாட்டார்கள். அது தான் அறிவு சார்ந்த வளர்ந்த நாடுகளின் பலம்.}

 

ONGC சூடானுக்கு ஒரு எரிவாயு எடுக்கும் இந்திய அரசின் சார்பாக செய்து கொடுக்க அதன் மூலம் நமக்கு சூடானிடம் இருந்து தேவையானவற்றை பெற முடிகிறது. அப்படி பார்த்தால் மறைமுகமாக இது போல நிறுவனங்கள் வளர்ச்சி என்பது இந்தியாவின் வலிமையை மேலும் உலக அரங்கில் கூட்டுகிறது. 

சரி இப்போ ONGC திட்டங்கள் எல்லாமே குறிவைத்து போராட்டங்கள் கட்டமைக்கபடுவது அப்பட்டமான நடக்கிறது , அது ஏன்?

 

இந்தியா என்ற வளரும் நாட்டின் கையை உடைக்க வேண்டும் என்றால் அதற்கு மிக சிறந்த வழி முதல் 10 இடத்தில் இருக்கும் பொதுதுறை நிறுவனங்களை அழிக்க வேண்டும். இது தான் இந்தியாவின் எதிரி நாடுகளின் எண்ணம். இது மொத்த இந்தியாவின் பொருளாதார வளார்ச்சி வரலாறு விவரம் அறிந்தவர் அனைவருக்கும் நன்கு தெரியும். 

 

இப்படி இந்திய அரசின் கீழ் வரும் நிறுவனங்கள் அனைத்தையும் நஷ்டம் ஆக்கவேண்டும் என்று முனைப்புடன் எப்போதுமே கம்யுனிஸ்ட் தொழில் சங்கங்கள் வேலை செய்யும். எவ்வளவு சம்பளம் கூட்டினாலும் போதாது போதாது என்று அவர்கள் புள்ளிவிவரமாக தூண்டிவிடுவது கம்யுனிஸ்ட் வேலை. அது சீனாவின் எண்ணம் – சீனாவின் எண்ணம் தங்கள் சித்தம் என்று வேலை செய்பவர்கள் நம்ம கம்யூனிஸ்ட் தலைவர்கள்.

 இப்போ போராட்டகங்கள் எப்படி கட்டமைக்கபடுகிறது?

 

இத்தனை நாட்களாக இந்த மாவோஸ்ட் , நக்சல் என்ற கம்யுனிஸ்ட் ஆதரவு தீவிரவாத கூட்டங்கள் தான் இந்த வேலையை மும்மரமாக செய்யும். அதாவது எந்த திட்டம் வந்தாலும் அதனை குழப்பும் விதமாக மக்க்ளிடயே வெகு புத்திசாலிதனமாக பொய் பரப்புரைகளை மேற்கொள்ளும். இதனால் ஆங்காங்கே தேவை இல்லாத போராட்டங்கள் வெடிக்கும்.

 

சமீபகாலமாக இந்த வேலையை மாவோஸ்ட், நக்கசல் ஆதரவாளர்கள் தங்களை நேரடியாக அப்படி காட்டிகொள்ளாமல் வேறு வேறு பெயர்களில் சமூகத்தில் கலந்து குழப்பும் வேலையை வேகமாக செய்கிறார்கள்.  இதற்கு மிகபெரிய அளவில் மதம் மாற்றும் கிருஸ்தவ அமைப்புகளும் கூட கைகோர்க்கின்றான. {20000 கிருஸ்தவ தொண்டு நிறுவனங்கள் மோடி அரசு இழுத்து மூடிவிட்டதை மறக்க வேண்டாம். அதில் ஒன்று நம்ம அணு உலை எதிர்ப்பு போராளி உதயகுமார்.}

 

இது போல் இயக்கங்களுக்கு நல்ல எடுத்துகாட்டு:

 

1.நாம் தமிழர் , 2. தந்தை பெரியார் திராவிடர் கழகம், 3.கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு என்று ஒரு கிருஷ்தவர அமைப்பின் பின் புலத்தில் சுப. உதயகுமாரன், 

4.தமிழ்த் தேசப் பேரியக்கம் பெ. மணியரசன்,  5.தமிழ்த் தேச விடுதலை இயக்கத்தின் தியாகு,  6.மே 17 இயக்கத்தின் திருமுருகன் என்ற கிருஸ்தவர்,  7.தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், 8.திராவிடர் விடுதலை கழகத்தின் தபசி குமரன்,  9.மனித நேய மக்கள் கட்சி இவர்கள் அனைவருக்கும் வழிகாட்டியாக நம்ம கம்யூனிஸ்ட் தலைவர்கள்.

 

இவர்கள் எண்ணம் மிக தெளிவாக இருக்கிறது அது "இந்த மேற் கூறிய நிறுவனங்களின் எந்த ஒரு திட்டமும் தமிழ் நாட்டின் உள்ளே வந்துவிட்டால் உடனே பிரச்சனை செய்ய வேண்டும். வேறு மாநிலங்களில் போராட்டம் இல்லை என்று கூற முடியாது. ஆனால் தமிழ் நாட்டில்   இவர்கள் ஆட்டம் உச்சத்தில் இருக்கிறது".

 

போராட்டங்களை எளிமையாக எப்படி தூண்டிவிடபடுகிறது?

 

அது தான் social psychology. 

 

ஒரு செய்தி மக்கள் பாதிக்கபட போவதாக வந்தால் – அது அப்படி நடக்காது என்று நீங்கள் பேசிவிட்டால் சாதாரணமானவர். அதுவே மக்களை காப்பாற்றவும் , அரசை எதிர்த்தும் , ஆட்சியர்கள் அரசியல்வாதிகளை திட்டியும் பேசிவிட்டால் நீங்கள் போராளி ஆகிவிடுவீர். பலருக்கு இந்த போராளி என்ற பிம்பம் பிடித்திருக்கிறது. அதனால் தான் தங்களுக்கு விவரமே தெரியவில்லை என்றாலும் கூட அந்த விசயத்தை தங்களுக்கு தெரிந்த மட்டத்தில் வைத்து விமர்சனம் செய்ய முயற்சிக்கிறார்கள்.

 

இது புரிகிறதா? அதாவது நான் நல்லவன் என்றால் நான் மக்களுகாக குறல் கொடுக்க வேண்டும். அது தான் சமூகத்தில் இருக்கும் வியாதி.  

 

இந்த social psychology வேலை நல்லவிதமாக செய்ய மிக முக்கியமானது , முதல் விழிப்புணர்வு செய்தி எப்படி மக்களிடம் சேர்க்க வேண்டும் என்பது தான். அதற்கு இப்போலாம் ரெம்ப கஷ்டபட தேவை இல்லை , ஒரு அனிமேசன் வீடியோ தயார் செய்து அதை youthube , facebook , whatsapp என்று அனுப்பினால் போதும். போராளிகளுக்கு பத்திகொள்ளும், நம்ம இயக்கங்களுக்கும் கிடைத்துவிடம் வேலை.

 

 

இவர்கள் இயக்கங்கள் உண்மையில் அப்படிபட்டவர்களா??? அது எப்டி நீங்க அப்படி சொல்லலாம் மாரிதாஸ்?

 

இவர்களின் பொதுவான குணம் நன்கு உற்றுகவனிக்கவும். தமிழ்நாடு தனி நாடு  இந்தியா நாட்டில் வளர்ச்சி சார்ந்த எந்த நல்ல விசயமும் பேச மறுப்பது,இந்திய நாட்டில் நல்ல திட்டம் என்று ஒன்றுகூட இல்லை என்ற மனநிலைக்கு மக்களை தள்ள முயற்சிப்பது ,இந்தியாவில் நீதி கிடைக்காது என்ற தோற்றத்தை உருவாக்குவது,

இந்தியாவின் அரசு , அரசியல்வாதிகள் , தொழில் அதிபர்கள் எல்லாம் சேர்ந்து பொது மக்களை திருடுகிறார்கள் என்று குழப்புவது,தனியார் கம்பெனிகளை விரட்டும் மனநிலைக்கு மக்களை கொண்டு சென்று பின்னர் வேலை இல்லை என்று பிதற்றுவது,

யாருமே நல்லது செய்ய போவது இல்லை என்று கூச்சல் போடுவது , எந்த மத்திய அரசின் திட்டம் என்றாலும் எதிர்ப்பது. இது தான் பொதுவான குணமாக இருக்கும். சின்ன சின்ன வேறுபாடு இருக்கலாம் ஆனால் பொதுவாக இவர்கள் அனைவரும் குணத்தில் ஒத்துபோவார்கள்.. 

அதைவிட ஒரு முக்கியமான ஒரு குணம் "அனைவரும் ஹிந்துகளை ஒன்றினைக்கவிடாமல் தடுப்பது இல்லை ஹிந்து மதத்தை அவமானம் செய்வது". ஹிந்து என்ற ஆன்மாவை கொன்றால் ஒழிய இந்தன் நாட்டை அழிக்கமுடியாது. அந்த வகையில் ஹிந்துகள் ஒன்றினையவிடாமல் தடுத்ததில் திராவிட கட்சிகளுக்கு முக்கிய கங்குண்டு…

ஆக கதிராமங்கலத்தில் மக்கள் போராட்டம் என்பது அப்படி தூண்டிவிட பட்ட போராட்டங்களில் ஒன்று வேறு ஒன்றும் இல்லை. 

 

-மாரிதாஸ்

One response to “கதிராமங்கலம் போராளிகள் என்ற பெயரில் நாசம் செய்யும் கூட்டம்”

  1. S.Kamaraj says:

    Super article. Thanks for highlighting that Communists and DK are the enemies of India and its history and that now they have found a new friend. All anarchists together in one boat. All Hindus need to be watchful.

Leave a Reply