இந்திய கடல்சார் பல்கலைக் கழகத்தின் 3-வது பட்டமளிப்பு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. இதில் மத்தியகப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர்கள் பொன். ராதாகிருஷ்ணன், மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டு பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம்பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள், பட்டங்களை வழங்கினர்.

விழாவில் அமைச்சர் பேசியதாவது:

2015-ல் அறிமுகப் படுத்தப்பட்ட ‘சாகர்மாலா’ திட்டத்தின் கீழ் 6 புதியபெரிய துறைமுகங்கள் நவீனப் படுத்தப்பட்டு வருகின்றன. உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து மேம்பாட்டுக்கு மத்திய அரசு அதிகமுக்கியத்துவம் அளிக்கிறது.

வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் பயணிகள் கப்பல் போக்கு வரத்துக்கும் மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்றார்.

Tags:

Leave a Reply