கமலஹாசனுக்கு சாமானியன் எழுதும் லெட்டர் , மடல் , இல்லை கடிதம்னே வெச்சுங்கோங்க

வணக்கம்,

உலகமே ஆபத்தான நிலையில் இருக்கும் போதும் நீங்கள் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். அதற்கு காரணம் யார் என்பதை நீங்களும் நானும் நாடே அறியும்

தாங்கள் பிரதமருக்கு எழுதியதாக நாளிதழ் ஊடகங்களில் வெளியான செய்தி பார்த்தேன்

ஊரடங்கு அறிவித்து பத்து நாட்களுக்கு பிறகு முன் திட்டமிடல் இல்லை என இப்போது கடிதம் எழுதி பிரபலமாக்க வேண்டிய அவசியம் என்ன ?

நீங்ள் சொன்னதை வாதத்திற்காக சரி என நினைத்தாலும் இதை ஏன் ஊரடங்கு அறிவித்த அன்றே ஏன் சொல்லவில்லை

அன்று சொன்னால் மக்கள் முழு மனதோடு ஊரடங்கை வரவேற்கிறார்கள். உங்கள் அரசியல் பேச்சு செல்லாக்காசாகி விடுமோ என்ற அச்சமோ இத்தனை நாள் காலதாமதம்

ஊரடங்கு பாதி நாட்களை தாண்டிய பின் பொதுவாக எல்லோருடைய மனதிலும் எழும் ஒரு வித சலிப்பு தேவை பாதிப்பை நீங்கள் அரசியலாக்க நினைக்கும் எண்ணம் இப்போது நீங்கள் சொல்வதில் புரிகிறது

சமைக்க எண்ணெய் இல்லாதவனை விளக்கேற்ற சொல்கிறீர்களே என ஜீவ காருண்ய வசனம் எழுதியுள்ள நீங்கள் சொல்வது போல சாப்பாட்டிற்கே வழியில்லாதவன் வாழும் நாட்டில் சினிமா எதற்கு என்று என்றைக்காவது சிந்தித்தது உண்டா ?

Big poors ( அதிக ஏழைகள்) வாழுவதாய் தாங்கள் சொல்லும் நாட்டில் #Bigboss என்ற கலாச்சார சீரழிவு எதற்கு என எப்போதாவது எண்ணி பார்த்ததுண்டா

பல நூற்றுக்கணக்கில் பணம் கொடுத்து பால்கனியில் அமர்ந்து படம் பார்க்கும் தமிழ் சினிமா ரசிகர்களின் பணத்தை சம்பாதிக்க தான் படம் நடிக்கிறீர்களா ?

உங்கள் படம் எல்லாம் பால்கணி மக்களுக்குதானா பாதசாரியில் படுத்து உறங்குபவனுக்கு இல்லையா ? என்று நாங்கள் கேள்வி கேட்டால் எந்த அரிதாரத்தை எடுத்து பூசிக்கொள்வீரோ

இந்தியனை இரண்டாக்க பலி கொடுத்தும் படம் எடுத்தீரே பாவமில்லையா ? பணம் கொடுத்தால் உயிர் வருமா ? சினிமா துறைக்கு சீல் வைக்க சொல்லுமே பார்க்கலாம்

நீங்கள் கூத்தாடியாய் மட்டும் இருந்திருந்தால் இந்த கேள்வி எழுப்பியிருக்க மாட்டேன்.

குடியாளும் வேட்கையில் அரசியல் பிழைத்தாய் அனலை வீசினால் சாமானியர்கள் கைதட்ட இது சதிலீலாவதி அல்ல. சதி லீலையின் பதி என அறிவோம்.

வீதியில் வசிப்போரே விளக்கேற்றிய அன்று பால்கனி பாமரன் நீர் விளக்கு பிடிக்கவில்லையே . விதண்டாவாதம் தான் பிடிப்பீரோ

உலக நாயகரே உலக நாடுகள் நிலைமை உற்று நோக்கினீரா ? ஊடரங்கு ஒன்றே அபாயத்திற்கு உபாயம் என அறியீரோ ? அறிவிலியோ ?

ஊரடங்கில் உமக்கு என்ன பாதிப்போ உம் உள்ளம் அறியும் இல்லம் தெரியும் உமக்கே புரியும் ஊரார் உணரார்

வீட்டிற்குள்ளே அடைபட்ட மனம் நாட்கள் கூட வெம்பும் வேதனை எழும். மனஅழுத்தம் கூட ஏற்படும். ஆம் உம்மை பார்த்து அதை தெரிந்து கொண்டோம் நடிப்பில்.

அதற்காக தான் ஒலி யும் ஒளியும் எழுப்ப சொன்னார் பிரதமர்.

ஓளிஓலியில் காசு பார்க்கும் உமக்கு இது காமெடியாக தான் தெரியும்

ஏழைகள் பாதிப்பென ஏப்பம் விடும் தாங்கள் ஏதாவது செய்தீரா ?

#ஐந்து_வருடம்_சினிமாவில்_சாதரண_நடிகர்களே_அரைகோடி_அளித்துள்ளார்களாம்.
#இந்தி நடிகரெல்லாம் பல கோடி அளித்துள்ளார்களாம் பிரதமரின் கொரோணா நிவராண பணிகளுக்கு

ஐம்பது வருடமாய் தமிழக மக்களின் சினிமா மோகத்தை காசாக்கி கல்லா கட்டிய #உலக_நாயகன்
#நீங்கள்_ஒருரூபாய்_கூட_கொடுக்கவில்லையே

ஓய்வூதிய பணத்தில் ஒருவன் முககவசம் கொடுக்கிறான். காலை உணவு பணத்தில் ஒருவன் கபசுர குடிநீர் தானம் செய்கிறான். பாமரன் கூட இங்கே பசித்தோர்க்கு உணவு கொடுக்கிறான்.
#நீர்_என்ன_செய்தீர்.

#குடிமகனே மெத்தையில் இருந்து சற்று இறங்கி வாரும்

தேசத்தின் நாயகனை தூற்றும் உத்தமவில்லனே #உருப்படியாய்_சமூகத்திற்கு உதவி செய்ய முயற்சி செய்யும்

#வித்தகம்_பேசாதீர்
#பணி_செய்ய_வாரும்

*கா.குற்றாலநாதன்
நெல்லை

Comments are closed.