கமல்மனதில் இருப்பதை என்னவென்று தெளிவுபடுத்த வேண்டும் என்று மத்திய இணைய மைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர்பேசுகையில், நடிகர் கமல்ஹாசன் கூறும் அரசியல் கருத்துக்களை புரிந்து கொள்ள எனக்கு கால அவகாசம் தேவை என்றுகூறினார்.

மேலும், ஊழல் குறித்த நடிகர் கமல்ஹாசன் பேசுவது அவருடைய தனிப்பட்டகருத்து என்றும் அவர்மனதில் இருப்பதை என்னவென்று தெளிவுப்படுத்த வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

வரும் 27 ம் தேதி அப்துல்கலாம் நினைவு மண்டபத்தை பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைக்கிறார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply