முரசொலி பவளவிழாவில் நடிகர் கமல் ஹாசன் பங்கேற்றதன் மூலம், தி.மு.க.வின் கைக்கூலி, ஊது குழல் என்பதை நிரூபித்து இருப்பதாக பாரதிய ஜனதா தேசிய தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுபேசிய எச்.ராஜா கமல்ஹாசன் பற்றி கூறியதாவது:-

விஸ்வரூபம் பட பிரச்சினையில் கமல்ஹாசன் தனக்கு ஒருபிரச்சினை என்றதும் அழுதார், புரண்டார். நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று சொல்லும்அளவுக்கு கோழைத்தனமாக செயல்பட்டார்.

தற்போது முரசொலி பவள விழாவில் பங்கேற்றதன் மூலம் தான்ஒரு தி.மு.க.வின் கைக்கூலி, ஊதுகுழல் என்பதை நிரூபித்து இருக்கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply