தமிழ்கடவுளான முருகன் மற்றும் கந்தசஷ்டி கவசத்தை கொச்சையாக சித்தரித்து கருப்பர்கூட்டம் என்கிற யூடியூப் சேனலில் காணொளி வெளியிடப்பட்டது. இதற்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது தொடர்பாக பாஜக சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்அளிக்கப்பட்டு வீடியோ வெளியிட்டோர் கைது செய்யப்பட வேண்டும் கருப்பர் கூட்டம் யூடியூப் தடைசெய்யப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இந்த வழக்கில் மத்திய குற்றப் பிரிவினர் வேளச்சேரியைசேர்ந்த செந்தில் வாசன் என்பவரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த சுரேந்தர் நடராஜன் என்னும் நாத்திகன் என்பவர் நேற்று முன்தினம் புதுச்சேரியில் உள்ள அரியாங் குப்பம் காவல் நிலையத்தில் சரண்அடைந்தார் .

அவரை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் சென்னை அழைத்து வந்தனர். நேற்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார் என்கிற தகவலறிந்து பாஜகவின் கரு. நாகராஜன் தலைமையில் சுமார் 250 பேர் எழும்பூர் நீதிமன்றவாசலில் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

One response to “கருப்பர் கூட்டதுக்கு எதிராக பாஜக ஆர்ப்பாட்டம்”