கரோனா தொற்று பரவல் அனைவருக்குமான படிப்பினையாக உள்ளது, இது பலபுதி படிப்பினைகளை ஏற்படுத்தியிருக்கிறது என்று பிரதமர்மோடி தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், நாடுமுழுவதும் உள்ள பஞ்சாயத்து தலைவர் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் உரையாடினார்.

அப்போது அவர் கூறியதாவது, கரோனா தொற்று பரவல் நம் அனைவரும் வேலை செய்யும் முறையையே மாற்றி விட்டது. கரோனா தொற்று எனும் பேரிடர் நாம் இதுவரை சந்தித்திராத பலபுதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதன் மூலம் நாம் பல புதிய விஷயங்களைக் கற்றுக் கொண்டுள்ளோம்.

மக்கள்தொகை அதிகம் நிறைந்த இந்தியா, சமூக இடைவெளியைப் பின்பற்றி எப்படி கரோனாவை கட்டுப்படுத்துகிறது என்பதை உலகமே உற்றுநோக்குகிறது. மக்களின் ஒட்டுமொத்த ஆதரவால், நாம் கரோனாவை எப்படி கட்டுப் படுத்தி வருகிறோம் என்பதை உலகமே பேசி கொண்டிருக்கிறது என்றும் பிரதமர் தெரிவித்தார்.

Comments are closed.