தனது பிரத்யேக செயலிமூலம் கர்நாடகத்தில் மட்டும் 25 லட்சம் மக்களை பிரதமர் நரேந்திரமோடி தொடர்பு கொண்டார் என்று பாஜக தெரிவித்துள்ளது.


கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி நடைபெற்றுவந்த சூறாவளி தேர்தல்பிரசாரம் வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது. 


தனது 'நமோ' செயலி மூலம் கர்நாடகத்தில் 25 லட்சம் மக்களை பிரதமர் மோடி தொடர்புகொண்டார் என்று பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு பொறுப்பாளர் அமித் மாளவியா தெரிவித்தார்


அவர் மேலும் கூறியதாவது: பாஜக வேட்பாளர்கள், முக்கிய பிரமுகர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் உள்பட 25 லட்சம்பேரை பிரதமர் மோடி 'நமோ' செயலி மூலம் விடியோவில் தொடர்புகொண்டு உரையாற்றினார். பாஜவினர், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.

உலகில் விடியோ மூலம் நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இதுபோன்று மக்களுடன் நேரடிதொடர்பை ஏற்படுத்திக் கொண்ட ஒரேதலைவர் பிரதமர் மோடி மட்டுமே. 


அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.இந்தச் செயலியை 1 கோடிபேர் பதிவிறக்கம் செய்து பயன் படுத்தி வருகின்றனர் என்றார் அமித்மாளவியா.

Leave a Reply