பெரும்சட்ட போராட்டத்திற்கு பிறகு கர்நாடகாவின் 23 வது முதல்வராக பா.ஜ.,வின் எடியூரப்பா இன்று பதவி யேற்றார். எடியூரப்பா முதல்வராவதற்கு தடையில்லை என சுப்ரீம் கோர்டில் விடியவிடிய நடந்த விசாரணையில் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து இன்று காலை 9 மணியளவில் கவர்னர் மாளிகையில் நடந்த பதவியேற்புவிழாவில் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுக் கொண்டார். 3வது முறையாக கர்நாடகாவின் முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுள்ளது குறிப்பிட த்தக்கது.


கவர்னர்மாளிகையில் உள்ள கண்ணாடி மாளிகையில் கவர்னர் வஜூபாய் வாலா, எடியூரப்பாவிற்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

Leave a Reply