பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், 75 நாள்கள் கர்நாடகா வில் யாத்திரை மேற்கொள்ள இருப்பதாக, பா.ஜ.க-வின் தேசியத் தலைவர் அமித்ஷா அறிவித்துள்ளார்.கர்நாடகா மாநிலத்தில், அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தகைய சூழலில், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், 75 நாள்கள் கொண்ட யாத்திரை நடத்துவதற்கு முடிவு செய்யப் பட்டுள்ளது. இந்த யாத்திரையை பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா வரும் நவம்பர் மாதம் 2-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். இந்த யாத்திரைக்கு, ’பரிவர்த்தன் யாத்ரா’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Leave a Reply