கர்நாடக மாநில பாஜக. தலைவர் எடியூரப்பா பெங்களூரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். காங்கிரஸ் ஆட்சியின் நிர்வாகசீர்கேடு மற்றும் ஊழல்களை முன்வைத்தும், மத்தியில் பாஜக. ஆட்சியில் நாடு அடைந்துள்ள வளர்ச்சியை விளக்கும் வகையில் கர்நாடக மாநிலத்தில் நவம்பர் முதல்தேதியில் இருந்து 70 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் பா.ஜ.க. பரிவர்த்தனை பேரணி நடைபெறும்.

இந்தபேரணியை நவம்பர் முதல் தேதியன்று பிரதமர் நரேந்திரமோடி, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா ஆகியோர் துவக்கி வைக்கின்றனர் என தெரிவித்த எடியூரப்பா, வரும் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 224 இடங்களில் 150 இடங்களில் பாஜக வெற்றிபெறும் வகையில் இந்தபரிவர்த்தனை பேரணி அமையும்.

மத்தியில் ஆட்சிக்கு வந்த மூன்றே ஆண்டுகளில் இந்தநாட்டை மாற்றியமைத்த பிரதமர் மோடியின் சாதனைகளை முன்வைத்து இந்தசட்டசபை தேர்தலை நாங்கள் சந்திப்போம். ஆனால், எந்தவொரு சாதனையையும் செய்யாமல், பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சி என்ற தகுதிகூட இல்லாத காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அடுத்த பிரதமர் நான்தான் என்று பகல்கனவு காண்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசில் பலதுறைகளில் மந்திரிகள் செய்துள்ள ஊழல் பட்டியலை வரும் 24-ம்தேதி பாஜக., வெளியிடும் எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply