கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கரோனா வைரஸ் பரவிவரும் நிலையில் பள்ளிகளை திறப்பது, தேர்வுநடத்துவது, ஆன்லைன் வகுப்பு நடத்துவது குறித்து விவாதிக்கப் பட்டது.

இந்த கூட்டத்துக்கு பின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சுரேஷ் குமார் கூறியதாவது: கடந்த ஒருவாரமாக கல்வித்துறை நிபுணர்கள், மனநல மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் பள்ளிகளை திறப்பது, ஆன்லைன் மூலம் பாடம் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப் பட்டது. அமைச்சரவைக் கூட்டத்திலும் இது குறித்து விவாதித்து சில முடிவுகள் எடுக்கப்பட்டன. ஆன்லைனில் பாடம்கற்பிப்பது என்பது மாணவர்கள் பள்ளிக்கு சென்று வகுப்பறையில் பாடம் கவனிப்பது போன்றதல்ல. இந்ததிட்டத்தின் மூலம் மாணவர்களின் நிலை, திறன் உள்ளிட்டவற்றை ஆசிரியரால் அறிய முடியாது. அதேபோல அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைனில் பங்கேற்கும்வசதியோ, தொழில்நுட்பமோ இல்லை.

எனவே 7-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்துவதற்கு தடைவிதிக்க படுக்கிறது. எனவே பள்ளி நிர்வாகங்கள் எக்காரணம் கொண்டும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது. அதேபோல கல்விக் கட்டணத்தை இந்த ஆண்டு உயர்த்தக்கூடாது. எஸ்எஸ்எல்சி தேர்வு திட்டமிட்டபடி வரும் 25-ம் தேதிதொடங்கும் என்றார்.

Comments are closed.