கற்றறிந்த கவிஞர்கள், ஆராய்ச்சிகளின் முடிவுகளை மேற்கோள் காட்டும் போது, அதன் உண்மை தன்மையை அறிந்து கருத்துக்களை வெளியிடவேண்டும்,'' என காரைக்குடியில் பா.ஜ., தேசியசெயலர் எச்.ராஜா கூறினார்.
அவர் கூறியதாவது: கவிஞர் வைரமுத்து அமெரிக்காவை சேர்ந்த சுபாஷ்சந்திர மாலிக் என்பவர் எழுதிய புத்தகத்தில் உள்ள கருத்தை மேற்கோள்காட்டி ஆண்டாளை அவதுாறாக பேசியுள்ளார். மதமாற்றவேலை எடுபட வேண்டுமானால், தமிழ்மக்களின் சரித்திரத்தை, தமிழ்மக்கள் வழிபடும் தெய்வங்களை இழிவுபடுத்த வேண்டும் என்ற குறிக்கோளோடு சுபாஷ் சந்திர மாலிக் எழுதியுள்ளார்.


ஜி.யு.போப் 1840-ல் தமிழ்மக்களின் நம்பிக்கை, பண்பாடு, கலாச்சாரத்தை குலைக்க ேவண்டும் என்றால் அவர்களின் மொழியை நாம் படிக்கவேண்டும்,' என்று கூறியுள்ளார். அவர் திருவள்ளுவரை பற்றி எழுதிய திருவள்ளுவ நாயனார் என்ற புத்தகத்தில் திருவள்ளுவர் வாழ்ந்தது 9, 10-ம் நுாற்றாண்டு. அவர் கிறிஸ்தவராகமாறினார். திருக்குறள் கிறிஸ்தவ சித்தாந்தங்களின் வெளிப்பாடு,' என எழுதியிருக்கிறார். அவை உண்மையா என்பதை நாம் பார்க்கவேண்டும்.


என் எதிர்வினை வைரமுத்துவை பற்றி அல்ல. ஆண்டாள் குறித்த அமெரிக்கநபர் சொன்னதை இவர் இந்துக்களின் மனம் புண்படும்படி சொன்னதால், அதுகுறித்து மட்டும்தான்.


வைரமுத்து வருத்தம் தெரிவித்துள்ளார். நான் பேசியது அவரதுமனதை புண்படுத்தியிருந்தால் அவருக்கு வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். ராஜா பேசினார், வைரமுத்து பேசினார். இதில் மற்றகட்சிகளுக்கு என்ன வேலை. ஒரு கவிஞர் மேற்கோள் காட்டும்போது, ஆராய்ச்சியாளரின் பின்புலம், அந்த தகவல் உண்மையானதா என்பதை பார்த்து பேசவேண்டும், என்றார்.

Leave a Reply